காலிகளின் கும்பல் ஒன்று அரசியல் ஆய்வாளர் ஒங் கியான் மிங்கின் வீட்டை இன்று பிற்பகல் தாக்கினர். முன்வாயில் கதவை உடைத்தாலும் வீட்டுக்குள் அவர்கள் புகவில்லை.
“மூன்று காலிகள் என் வீட்டுக்குள் கதவை உடைத்துக்கொண்டு நுழைய பார்த்தார்கள். முன்வாயில் கதவுகளை உடைத்தார்கள். அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டார்கள். பிறகு புறப்பட்டுச் சென்றனர்”, என்று அவர் டிவிட்டரில் கூறியிருந்தார்.
ஒங் (இடம்) அதைக் கொள்ளையிடும் முயற்சியாக கருதவில்லை, “அரசியல் நோக்கம் கொண்ட” தாக்குதல் என்று சந்தேகிக்கிறார்.
“இப்படிப்பட்ட நாட்டில்தான் வசிக்கிறோம். சில கட்சிகளையும் அரசாங்கத்தையும் குறைகூறினால் அடிக்க வருகிறார்கள். ஆனால், இதற்கெல்லாம் அஞ்ச மாட்டேன்”, என்றவர் கூறினார்.
இதன் தொடர்பில் ஒங் போலீசில் புகார் செய்துள்ளார்.
உதவி கேட்டு அழைத்ததும் உடனே விரைந்து வந்த போலீசுக்கும் ஒங் தம் டிவிட்டரில் பாராட்டுத் தெரிவித்தார்.