“இசா-வுக்குப் பதில் இன்னும் கடுமையான சட்டங்கள் வரும்”

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தையும் (இசா) சிவில், சமூக உரிமைகளை சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் மற்ற சட்டங்களையும்  ரத்து செய்யும் நோக்கத்தை அளவுக்கு அதிகமாக மதிப்பீடு செய்ய மாட்டார்கள் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மலேசியர்கள் போதுமான அளவுக்கு மன முதிர்ச்சி அடைந்துள்ளதே அதற்குக் காரணம் என அவர் சொன்னார்.

இசாவுக்குப் பதில் அறிமுகமாகும் இரண்டு சட்டங்களும் நடப்பில் பயன்படுத்தப்படும் சட்டத்தைக் காட்டிலும் கடுமையானதாக இல்லாவிட்டாலும் இசா-வைப் போன்று கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கும் என அன்வார் குறிப்பிட்டார்.

“மலேசியர்களுடைய உள்ளங்களைக் கவருவதே அந்த அறிவிப்பின் நோக்கமாகும். அதனை விரிவான சீர்திருத்தங்கள் என்று எண்ணும் அளவுக்கு மலேசியர்கள் பலவீனமானவர்கள் இல்லை என நான் நம்புகிறேன். பிரதமர் நஜிப்பிந் அப்கோ தயாரித்த- அறிக்கையினால் மக்கள் எளிதாக ஏமாந்து விட மாட்டார்கள் என நான் நம்புகிறேன்.”

“என் எண்ணத்தில் இப்போது இரண்டு கேள்விகள் எழுந்துள்ளன. இசா எப்போது ரத்துச் செய்யப்படும் ? அந்த இரு சட்டங்களும் எப்படி இருக்கும். அம்னோ உள் வட்டாரத் தகவல்களின் படி, அவை இசா-வைப் போன்றுகட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கும்.

“கடந்த மாதம் இசா சட்டத்தை  அம்னோ வரவேற்று தற்காத்துப் பேசியுள்ள வேளையில் அது எவ்வாறு கட்டுப்பாடுகளைக் கொண்ட அந்தச் சட்டத்தை எப்படி கை விடும் ? அத்துடன் இப்போது அந்த அறிவிப்பைத்

தொடர்ந்து திட்டமிடப்பட்டுள்ள இசா ரத்து நடவடிக்கையைப் பாராட்டி தலையங்கங்கள் வெளியாகியுள்ளன.” மலாய் ஆட்சியுரிமையை நிலை நிறுத்தவும் அரசாங்கத்தில் அம்னோ நிலைமையை பாதுகாக்கவும் இசா பயன்படுத்தப்பட்டதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.” என்று அந்த பெர்மாத்தாங் பாவ் எம்பி சொன்னார்.