‘பக்காத்தான் ஆட்சிக்கு வந்தாலும் எந்த அநீதியையும் எதிர்த்துப் போராடுங்கள்’

எதிர்வரும் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் புதிய அரசாங்கத்தை அமைத்தாலும் மக்கள் நேர்மையற்ற ஆளுமைக்கு எதிராக போராடுவதற்கு தொடர்ந்து துணிச்சலைப் பெற்றிருக்க வேண்டும் என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கேட்டுக் கொண்டுள்ளார்.

“மக்களுக்கு அதிகாரம் கிடைக்கும் போது அதனை அகற்றுவது மிகவும் கடினம். அதனால்தான் யார் ஆட்சிக்கு வந்தாலும் மனித உரிமைகளுக்குப் போராடும் அமைப்புக்கள் நிலைத்திருக்கின்றன. வலுவாகவும் திகழ்கின்றன,” என்றார் அவர்.

மாட் சாபு என்றும் அழைக்கப்படும் அந்த பாஸ் தலைவர் நேற்றிரவு “இசா: தெளிவான சித்தரவதை” என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பேசினார்.

பக்காத்தானுக்கு அதிகாரம் கிடைத்தால் முந்திய அரசாங்கத்தைப் போன்று கொடூரமான முடிவுகளை எடுக்கும் போக்கு அதனிடம் தொடருமா என மாட் சாபு-விடம் வினவப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த அவர் பின் வரும் கேள்விகளை எழுப்பினார்:

“குடிமக்கள் எங்களுக்கு அறிவுரை கூறி எங்களுக்கு எதிராக நடந்து கொண்டால் ? கட்டுக்கோப்பான பயனுள்ள குடிமக்களாக இருங்கள் என்றும் அரசாங்கத்தை மாற்ற வேண்டாம் என்றும் சொல்லி அவர்களுடைய வாயை மூடிக் கொள்ளுமாறு சொல்லப் போகிறோமா ?” என அவர் நூறு பேர் பங்கு கொண்ட கூட்டத்தில் வினவினார்,