திரெங்கானு அரசு, பள்ளிச் சீருடை வாங்கிய விவகாரத்தில் பாஸ் பத்து புரோக் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சைட் அஸ்மான் சைட் அஹ்மட் மற்றும் மூவருக்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
கடந்த டிசம்பர் 15-இல், மாநில அரசும் மந்திரி புசாரும் இரு குத்தகையாளர்களும் தொடுத்திருந்த அவ்வழக்கு தொடர்பில் எதிர்வாதிகள் எழுப்பிய தொடக்கநிலை மறுப்பை ஏற்றுகொண்டு நீதிபதி அமிலியா டீ ஹொங் கியோக் அப்துல்லா வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
அவ்வழக்கில் சைட் அஸ்மான், பாஸ் செய்திமடலான ஹராகாவின் தலைமை ஆசிரியர்
அஹ்மட் லுப்தி ஒத்மான், வெளியீட்டாளர் அங்காத்தான் இடாரான் எண்டர்பிரைஸ் ஆகியோர் எதிர்வாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
வாதிகள், ஹராகா செய்தித்தாளில் ‘Seleweng RM30 juta bantuan sekolah? (பள்ளி உதவி என்ற பெயரில் ரிம30மில்லியன் முறைகேடு) என்ற தலைப்பில் சைட் அஸ்மான் கடந்த ஆண்டு நவம்பரில் எழுதியிருந்த கட்டுரை தங்களின் நற்பெயருக்குக் களங்கம் உண்டுபண்ணுவதாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.