சிலாங்கூரிலும் கூட்டரசு பிரதேசத்திலும் நீர் பங்கீடு அவசியமில்லை என்று தண்ணீர் விவகாரம் மீதான அமைச்சரவைக் குழு இன்று கூறியது.
“இன்று முன்வைக்கப்பட்ட விளக்கங்களைக் கேட்ட பின்னர் இப்போதைய நிலையில் பங்கீடு செய்வது அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம்”, என்று அமைச்சரவைக் குழுத் தலைவரும் துணைப் பிரதமருமான முகைதின் யாசின் தெரிவித்தார்.
எனினும், கிள்ளான் பள்ளத்தாக்கில் பல இடங்களில் “நீர் வரத்து இல்லை” என்று கூறிய அவர், அங்கெல்லாம் நீர் கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு நீர் விநியோகக் குத்தகை நிறுவனமான ஷரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூருக்கு(ஸபாஷ்) உத்தரவிடப்பட்டிருப்பதாக கூறினார்.
தேசிய நீர்சேவை ஆணையம், தண்ணீர் வரவில்லை என்று காப்பார், பலாக்கோங், ஹுலு லங்காட், ஓவர்சீஸ் கார்டன், பாண்டான் இண்டா, பாண்டான் பெர்டானா உள்பட பல பகுதிகளிலிருந்தும் புகார்களைப் பெற்றிருக்கிறது என்று முகைதின் தெரிவித்தார்.