சுமத்ராவில் நிலநடுக்கம்,அதிர்வுகள் மலேசியாவில் உணரப்பட்டன

ரிக்டர் அளவைக்கருவியில் 6.4 என்று பதிவான ஒரு நில நடுக்கம் இந்தோனேசிய தீவான சுமத்ராவின் மேற்குக்கரைக்கு அப்பால் நிகழ்ந்துள்ளது என்று ஏஎப்பி செய்தி நிறுவனம் கூறியது.

நிலநடுக்கத்துக்கு அஞ்சி வீட்டை விட்டு வெளியேறி ஓடிய ஒரு மனிதர் அதிர்ச்சியில் இறந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலை மணி 7.30க்கு நிகழ்ந்த அந்த நில நடுக்கம் மேடானுக்கு  300கிமீ தொலைவில் 45கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வுத்துறை கூறிற்று.

மலேசிய வானியல் ஆய்வுத் துறையின் அறிக்கை, பேராக், லூமுட்டுக்கு 547கிமீ தொலைவில் நில நடுக்கம் மையம் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டது.அதன் அதிர்வுகள் மலேசியாவின் மேற்கு கரையில் உணரப்பட்டதாகவும் அது தெரிவித்தது.

சுமத்ராவின் மேற்குக் கரைக்கு அப்பால் 150கிமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிறிய தீவான சிமேலு-வில் குடியிருப்பவர்கள், நிலம் கடுமையாக குலுங்கியதாகவும் அதன் விளைவாக மின்சார விநியோகம் தடைப்பட்டதாகவும் கூறினர்.