1998-இலிருந்து 37 வங்காளதேசிகள் மட்டுமே குடியுரிமை பெற்றிருக்கிறார்கள் என்று தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி) நேற்று அறிவித்தது.
“இவர்களில் 14 பேர்தான் வாக்காளர்களாக பதிவு செய்துகொண்டிருகிறார்கள்.இவர்கள் மட்டுமே எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்”, என்று என்ஆர்டி தலைவர் ஜரியா முகம்மட் சைட் நேற்று பின்னேரம் விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்
இவ்வாண்டு ஆகஸ்ட் வரை, நால்வருக்குத்தான் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஐவருக்கு, மலேசிய மனைவியரைப் பெற்றிருந்தனர் என்பதால் குடியுரிமை வழங்கப்பட்டது. நால்வர், மலேசியர்களைப் பெற்றோராகக் கொண்டிருந்தனர்.
அந்த ஒன்பதின்மரும் 12 ஆண்டுகள் நிரந்தர வசிப்பிடத் தகுதி பெற்றவர்களாக இருந்து அதன்பின்னரே குடியுரிமை பெற்றனர் என்றவர் கூறினார்.
19 பேருக்கு பகுதி 15 ஏ-இன்கீழ் குடியுரிமை வழங்கப்பட்டது.இப்பகுதி 21-வயதுக்குக் குறைந்தவர்களுக்கு சிறப்பு நிபந்தனைகளுடன் குடியுரிமை வழங்க வகை செய்கிறது.
வங்காள தேச அரசின் வலைத்தளம் ஒன்றில், வங்காளதேசத் தொழிலாளர்கள் பிஎன்னுக்கு வாக்களிதால் “எளிதில் மலேசியக் குடியுரிமை பெறலாம்” என்று ஓர் அறிவிப்பு இடம்பெற்றிருந்ததை அடுத்து இந்த அறிக்கை வெளியிடப்பது.
அப்படி ஓர் அறிவிப்பு இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுவதை வங்காள தேசத் தூதரகம் மறுத்தது.
“உயர் வட்டாரங்களை” மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டிருந்த அந்த அறிவிப்பும் வங்காள தேச அரசின் வலைத்தளத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.