உங்கள் கருத்து: “அந்த இயக்கமே ஒற்றுமைக் குலைந்து தீர்ந்துபோன சக்தியாகி விட்டது. அந்நிலையை வேதமூர்த்தியால் சீர்படுத்த முடியுமா என்பது சந்தேகமே”.
‘தேடப்பட்ட மனிதர்’ வேதமூர்த்தி திரும்பி வந்தார்
ஸ்வைபெண்டர்: இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி அவர்களே, நீங்கள் லண்டனில் நான்காண்டுகளாக ‘விடுமுறை’ கழித்துக்கொண்டிருந்த வேளை இங்கு அந்த இயக்கம் உருக்குலைந்து சிறுசிறு கொசுக் கட்சிகளாக உடைந்துபோய் அம்னோவின் கவனத்தைப் பெறும் முயற்சியிலும் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஒத்துழைக்க மாட்டோம் என்று பக்காத்தான் ரக்யாட்டுக்கு எச்சரிக்கை விடுப்பதிலும் காலத்தைக் கழித்து வருகின்றன.
இப்போது நீங்கள் திரும்பி வந்திருக்கிறீர்கள்.உங்கள் திட்டம் என்ன, இண்ட்ராப் உணர்வுக்குப் புத்துயிர் அளிக்க என்ன செய்யப் போகிறீர்கள்?
இண்ட்ராப் தீர்ந்துபோன ஒரு சக்தி என்பது பலரின் நினைப்பு.இதற்குப் பலரை அவர்கள் குற்றம் சொல்கிறார்கள். ஆனால், அப்படிக் குற்றம் சொல்வோர் தாங்களே இந்நிலைக்குக் காரணம் என்பதை உணர்வதில்லை.
பாலா செல்லையா: ஒரு ஜனநாயக நாட்டில் யாரும் எதை வேண்டுமானாலும் பேசலாம், செய்யலாம்.அது அவர்களின் உரிமை.
மனித உரிமைக் கட்சி தலைமைச் செயலாளர் பி.உதயகுமார், வேதாவின் அண்ணன், ஒரு நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டிருக்கிறார். அது அவரது உரிமை.ஆனால், வேதா ஒரு மிதமான போக்கை, ‘எதையும் பேசித் தீர்க்கலாம்’ என்ற அணுகுமுறையைப் பின்பற்றுவார் என்பது நிச்சயம்.
அவருக்கு அரசியல் இலட்சியம் எல்லாம் கிடையாது. இந்தியர்களின் உரிமைகளுக்காக போராடுவதுதான் அவரது இலட்சியம்.
அதனால், அவர் திட்டங்களைச் செயல்படுத்த சிறிது அவகாசம் கொடுங்கள்.அதன்பின் தீர்ப்புச் சொல்லுங்கள்.
அந்நியன்: வேதா, உங்கள் சகோதரர் உதயாவை நம்ப முடியவில்லை.நீங்களும் அவரைப்போல் ஆகிவிட மாட்டீர்களே. இந்தியர்கள் உங்களை நம்பலாமா?
எங்களின் நம்பிக்கையைப் பெற வேண்டுமானால், உங்கள் அண்ணனுக்கு அவரது அரசியல் ஆசைகளை மூட்டை கட்டிவைத்துவிட்டு மாற்றரசுக் கட்சியுடன் சேர்ந்து பிஎன்னைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுமாறு நல்லவிதமாக எடுத்துரையுங்கள்.
ஆனால், ஒன்று எங்களுக்குப் புரியவில்லை. உங்களுக்குக் கடப்பிதழ் எப்படிக் கொடுக்கப்பட்டது? ஏன் குடிநுழைவு சோதனைச் சாவடியில் ஏன் நீங்கள் தடுக்கப்படவில்லை?
சோலாரிஸ்: இத்தனை ஆண்டுகளுக்குப் பின் வேதா நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றால் அதில் ஏதோ அரசியல் தந்திரம் இருக்கிறது.
பெர்சே தலைமுறை மலேசியன்:உங்களுக்கு நல்வரவு. இந்தியர்கள் உங்கள்மீது வைத்துள்ள நம்பிக்கையைப் பொய்யாக்கி விட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
தேவ் ஆனந்த் பிள்ளை: அவரது வருகையைத் தொடர்ந்து இந்தியர்கள் இந்நாட்டில் சமத்துவம் பெற புதுப்பாதை போடப்படும் என்று எதிர்பார்ப்போம்.
சமத்துவம் பெற்றால், குற்றச் செயல்கள் நிறைந்துள்ள சமூகத்தைப் பொருளாதார வளம் மிக்க சமூகமாக மாற்ற முடியும்.
ரஞ்சிட் சிங்: இந்திய மலேசியரில் வறிய நிலையில் உள்ளவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால் மற்ற இந்தியர்கள் அதில் ஒத்துழைக்க வேண்டும்.
ஜோ பெர்னாண்டஸ்: இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக தோட்டப்புறங்களில் அடிமைகள்போல் உழைத்த அடிநிலை இந்தியர்களுக்குச் சரியான தலைமைத்துவம் தேவை. தலைவர் என்பவர் சரியான தொலைநோக்கையும் அதை அடைவதற்கான வழிமுறைகளையும் கொண்டிருக்க வேண்டும்.
வேதா, இந்தியர்கள் சார்பாக தொடுக்கப்படும் வழக்கு பற்றி விளக்க நாடு முழுக்கப் பயணம் செய்வார் என்று கூறப்பட்டுள்ளது. இண்ட்ராபை அரசியலைவிட்டு விலக்கி வைத்து அப்படி ஒரு செயலில் ஈடுபடுவது நல்ல யோசனைதான்.