“பாபியா சட்டம் வங்கித் தொழிலில் உள்ளவர்கள் தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவதைத் தடுப்பதற்காகும். குற்றச் செயல்களை அம்பலப்படுத்துவோரை மௌனமாக்குவதற்கு அல்ல.”
ராபிஸிக்கு எதிரான பாபியா குற்றச்சாட்டை நஜிப் ஆதரிக்கிறார்
மாற்றம்: பிரதமர் நஜிப் ரசாக் சொல்வதில் பாதி மட்டுமே உண்மை. நாட்டின் நிதி முறை வெற்றி அடைவதற்கு வங்கி வாடிக்கையாளர்களுடைய சட்டப்பூர்வ தனிப்பட்ட உரிமையை மிகவும் முக்கியமாகும். ஆனால் மோசடிக்காரர்களுக்கும் சட்ட விரோத நாணய மாற்று வணிகர்களுக்கும் அதே பாதுகாப்பு கொடுக்கப்படக் கூடாது.
ஒரு காலத்தில் சர்வாதிகாரிகளுக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கும் பாதுகாப்பான புகலிடமாகத் திகழ்ந்த ஸ்விட்சர்லாந்து கூட இப்போது வரி மற்றும் கறுப்புப் பண விவகாரங்கள் தொடர்பில் தகவல்களை பரிமாறிக் கொள்ள வகை செய்யும் ஒஇசிடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
உண்மையில் நிதிகள் மோசடியான வழிகளில் பெறப்பட்டதாக சந்தேகம் எழுந்தால் அரசியல்வாதிகளிடமிருந்து இப்போது ஸ்விட்சர்லாந்து வங்கிகள் சேமிப்புக்களை ஏற்றுக் கொள்வதில்லை.
கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதிலும் ஊழலிலும் தொடர்ந்து ஈடுபடுகின்றவர்களுடைய தனிப்பட்ட உரிமையை பாபியா பாதுகாக்க வேண்டுமா என்பது மீது நஜிப் தமது நிலையை விளக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
விசுவாசமான மலேசியன்: அலங்காரப் பேச்சுக்கள் வேண்டாம், பிரதமர் அவர்களே. சொந்த நன்மைக்காக தகவல்களை அம்பலப்படுத்துவதற்கும் பொது நன்மைக்காக தகவல்களை அம்பலப்படுத்துவதற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. இந்த விஷயத்தில் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தில் பொது நிதிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
லிம் சொங் லியாங்: பாபியா சட்டம் வங்கித் தொழிலில் உள்ளவர்கள் தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவதைத்தடுப்பதற்காகும். குற்றச் செயல்களை அம்பலப்படுத்துவோரை மௌனமாக்குவதற்கு அல்ல. நீங்கள் அதனைச் செய்து விட்டீர்கள்.
ஸ்டார்ர்: தகவல்களை அம்பலப்படுத்துவோர் மீது பாபியா சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதை நஜிப் தற்காக்கமுயலுகிறார். அது உண்மையில் அபத்தமானது.
அவர் ஒன்று தூய்மையான அரசாங்கத்தை நாட வேண்டும். அல்லது அதற்கு எதிராக இருக்க வேண்டும். இரண்டு வழிகள் இருக்கக் கூடாது. பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் விஷயத்தில் அவர் செய்ததை மன்னிக்கவே முடியாது. அது அரசாங்கத்தை உருமாற்றுவதில் அவர் தீவிரமாக இல்லை என்பதையே காட்டுகிறது.
அடையாளம் இல்லாதவன் #19098644: இது மிகவும் அபத்தமான அறிக்கை ஆகும். வங்கி முறையின்நேர்மையை உறுதி செய்வதே பாபியா சட்டத்தின் நோக்கமாகும். ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பம் போன்ற கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குகின்றவர்கள் வங்கி முறையை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதே அதன் நோக்கமாகும்.
பாங்க் நெகாரா மலேசியா அத்தகைய மோசடிகளை தடுக்கத் தவறி விட்டதால் தகவல்களை மற்றவர்கள் வெளிப்படுத்த வேண்டியுள்ளது.
பிராமண்: பாபியா சட்டம் மீது நஜிப் சொல்வதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். என்றாலும்மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சுயேச்சையாக செயல்படுவதையும் வழக்குத் தொடரப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். அதனை ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் முடிவு செய்யக் கூடாது.
நடப்பி ஏஜி நீக்கப்பட்டு புதியவர் நியமிக்கப்பட வேண்டும். அப்போது தான் மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும். அது செய்யப்படாமல் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் ஏஜி அலுவலகமும் பாகுபாடு காட்டுவதாகக் கருதப்படும் வேளையில் ஊடகங்களே மாற்று வழியாகும். அந்த சூழ்நிலைகளில் ராபிஸி, முன்னாள் பப்ளிக் வங்கி குமாஸ்தா ஜொஹாரி முகமட் ஆகியோரது நடவடிக்கைகளை பாராட்ட வேண்டும்.