ஸபாஷ்: தண்ணீர் பங்கீட்டைக் குடியிருப்பாளர்கள் ஆதரிக்கிறார்கள்

குடியிருப்பாளர்கள் பலருடைய கோரிக்கைகளுக்கு இணங்க தண்ணீர் பங்கீட்டு விவகாரத்தைத் தேசிய நீர்ச்சேவை ஆணையத்தின்(ஸ்பேன்) கவனத்துக்கு மீண்டும் கொண்டு செல்லப் போவதாக ஷரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூர்(ஸபாஷ்) கூறியுள்ளது.

“சீரமத்தை எல்லாரும் பகிர்ந்துகொள்ளும் வகையில் தண்ணீர் பங்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் குரல்கள் வலுத்து வருகின்றன”, என்று தலைமை நடவடிக்கை அதிகாரி லீ மியாங் கொய்(வலம்) இன்று பலாக்கோங்கில் நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில் கூறினார்.

“இதுதான் பொதுமக்களின் முடிவு என்று தெரிகிறது.இதை ஸ்பேனிடம் தெரிவிப்பேன்”, என்றாரவர்.

அந்த விளக்கக் கூட்டத்தில் குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டு பல புகார்களை முன்வைத்தனர்.புக்கிட் பெலிம்பிங் போன்ற கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மூன்று மாதங்களாக தண்ணீர் கிடைப்பதில்லை என்று சிலர் முறையிட்டனர்.

“புத்ரா ஜெயாவுக்கான தண்ணீரை நிறுத்துங்கள். அல்லது காலையில் செராஸ் ஜெயா, அல்லது ஸ்ரீ தீமாவுக்கான தண்ணீரை நிறுத்துங்கள், எங்களுக்குச் சிறிதளவாவது தண்ணீர் கிடைக்கும்.

“அரைநாள் தண்ணீர் இல்லை என்றால் ஏற்க முடியும்.ஆனால், நாள் முழுக்க இல்லை என்பதை என்னால் ஏற்க இயலாது”, என்று ஒரு குடியிருப்பாளரான முகம்மட் ஜாலி அப்துல் காடிர் கூறினார்.

இன்னொரு குடியிருப்பாளர் எஸ்.மணியம் என்பார்,“எங்களுக்கு தண்ணீர் வேண்டும்.அதைக் கட்டுப்படுத்தி எல்லாருக்கும் பகிர்ந்து கொடுங்கள்.ஒரு சில இடங்களில் தண்ணீர் கிடைப்பதும் மற்ற இடங்களில் அறவே கிடைக்காத நிலையும் இருக்கக் கூடாது.கழிவறைக்குச் செல்ல வேண்டிய அவசியம் வரும்போது இன்னொருவர் வீட்டுக்காக செல்ல முடியும்?”, என்று வினவினார்.

TAGS: