சிலாங்கூரில் தண்ணீர் நிர்வாகத்தை மாநில அரசாங்கம் எடுத்துக் கொள்ளத் தவறினால் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் பதவி துறக்க வேண்டும் என மாநில பிஎன் தொடர்புக் குழுத் துணைத் தலைவர் நோ ஒமார் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
வெற்றி பெற்ற நிறுவனத் தலைவர் என்ற முறையில் அப்துல் காலித் அந்த விஷயத்தில் நிபுணத்துவம் பெற்றவர். அதனைத் தீர்க்கும் ஆற்றலைப் பெற்றவர் என நோ சொன்னார்.
“மந்திரி புசார் நிறுவனப் பெரும்புள்ளி. ஆகவே அவர்கள் அதனை எப்படிக் கையாளுகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.”
“அவர் அந்தப் பிரச்னையைத் தீர்க்கப் போவதாக ஏற்கனவே பல முறை வாக்களித்துள்ளார். வரும் செப்டம்பருக்குள் அவர் அதனைச் செய்ய முடியாவிட்டால் அவர் பதவி விலகுவது நல்லது,” என்றார் நோ ஒமார்.