தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு தனது பரிந்துரைகளை வழங்குவதற்கு ஆறு மாதம் அவகாசம் கொடுக்கப்படும்.
அந்தத் தகவலை துணைப் பிரதமர் முஹைடின் யாசின் இன்று வெளியிட்டார்.
நாடாளுமன்றம் அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி மீண்டும் கூடும் போது அந்தக் குழுவை அமைப்பதற்கான மசோதா சமர்பிக்கப்படும்.
அந்தக் குழுவில் இடம் பெறவிருக்கும் ஐந்து பிஎன் எம்பி-க்களின் பெயர்களும் சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் முஹைடின் தெரிவித்தார்.
தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் இணைவதாக எதிர்த்தரப்பு அண்மையில் விடுத்த அறிவிப்பையும் அவர் வரவேற்றார்.