ஆளும் கூட்டணி ஊழல் நிறைந்தது என்னும் எண்ணத்தை மாற்றுவதற்கு உங்கள் தோற்றத்தை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வளப்பத்தை செல்வத்தை வெளிச்சம் போட்டுக் காண்பிக்காதீர்கள் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் பிஎன் தலைவர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் உட்பட கோலா சிலாங்கூரில் கூடியுள்ள 400 பிஎன் தலைவர்களிடம் அந்த மூத்த தலைவர் அவ்வாறு கூறினார்.
இல்லை என்றால் அந்த கூட்டணி குறித்துப் பேசினால் “வெறுப்பு வருகிறது” என்ற எண்ணம் தொடரும் என்றார் அவர்.
“பலர் பிஎன்- னை வெறுப்புடன் பார்ப்பதை நான் காண்கிறேன். அவர்கள் வெளிப்படையாகவே பிஎன்- னை நிராகரிக்கின்றனர். ”
“நாம் அதனை ஆய்வு செய்தால் இனிமேலும் நாம் அரசாங்கத்தை அமைக்கப் போராடவில்லை என்பதையும் சொந்த நன்மைக்காக உழைப்பதையும் நாம் காண முடியும்”, என மகாதீர் சொன்னார்.
“தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் தங்களுக்கு முன்பு வாங்குவதற்கு வசதி இல்லாத ‘7 மில்லியன் ரிங்கிட் அல்லது 8 மில்லியன் ரிங்கிட் வீடுகளை’ திடீரென வாங்குவதின் மூலம் தங்கள் வளப்பத்தை வெளிச்சம் போட்டுக் காண்பிப்பதுடன் “ஆதரவையும் வாங்க வேண்டிய” தேவை இருப்பதையும் உணரத் தொடங்குகின்றனர்.”
“தங்களது ஆதரவாளர்கள் பணம் கோருவதால், தங்களது வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவும் குத்தகைகளைப் பெற வேண்டிய” தேவையும் ஏற்படுவதாக பிஎன் பேராளர்கள் கூறுவதாகவும் மகாதீர் சொன்னார்
“பிரபலம் அடைவதற்கு ஒருவர் மக்களை வாங்குகிறார்”
“பிரபலம் அடைவதற்கு ஒருவர் மக்களை வாங்குகிறார். ஆனால் எவ்வளவு பணம் இருந்தாலும் போதாது. இறுதியில் சமூகமே ஊழலில் மூழ்கி விடுகிறது.”
“அடுத்து அம்னோவையும் மற்ற உறுப்புக் கட்சிகளையும் ஊழல் எனக் கருதுகிறது.”
சிலாங்கூரில் பக்காத்தான் ராக்யாட்டிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான பிஎன் திட்டத்தின் ஒரு பகுதியாக கோலசிலாங்கூரில் அந்தக் கூட்டம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை வரை அது தொடரும்.