IPCMC போலீஸ் மீது பொது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தும்

IPCMC என்ற போலீஸ் புகார்கள், தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையம் அமைக்கப்படுவதின் மூலம் போலீஸ் மீது பொது மக்கள் நம்பிக்கை குறைந்து வருவதைத் தடுக்க முடியும் என Proham என்ற மனித உரிமைகள் மேம்பாட்டுச் சங்கம் கூறியுள்ளது.

போலீசாரின் தவறான நடத்தைகளை ஆய்வு செய்வதற்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள நேர்மை அமலாக்க ஆணையத்தை (EAIC) காட்டிலும் IPCMC -யை சிறந்த அமைப்பாக விளங்க முடியும் என Proham இன்று ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிகாரத்துவக் குற்றப் புள்ளிவிவரங்கள் மீது பொது மக்களிடம் பரவியுள்ள அவநம்பிக்கையை  கடந்த 10 நாட்களில் போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த 36 வயது சியான் சின் லீ, 59 வயது லாகான் டோலா காவோங் ஆகியோர் சம்பந்தப்பட்ட மரணமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஆகஸ்ட் 21ம் தேதி போலீசார் சுட்ட போது 26 வயது தினேஷ் மரணமடைந்த சம்பவமும் மேலும் அதிகரித்துள்ளதாக அது குறிப்பிட்டது.

அந்த Proham அமைப்பில் மனித உரிமை ஆணைய (சுஹாக்காம்) முன்னாள் உறுப்பினர்கள் தலைமைத்துவப் பொறுப்புக்களை வகிக்கின்றனர். அந்தப் பிரச்னைகளுக்குச் சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் நாடியுள்ள தீர்வுகளை EAIC ஒருங்கிணைக்கவில்லை என்றும் Proham குறிப்பிட்டது.

அதற்கு மாறாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்களும் சிவில் சமூக அமைப்புக்களும் அந்தப் பிரச்னைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

“EAIC அந்த விஷயங்களில் தன்முனைப்பாக செயல்படவில்லை. மேலும் அது சுஹாக்காமுக்கு உள்ளதைப் போல சிவில் சமூகம் உட்பட  பொது மக்களிடமிருந்து போதுமான அளவுக்கு நம்பிக்கையையும் பெறவில்லை,” என்றும் அது தெரிவித்தது.

அத்தகையப் பிரச்னைகள் மலேசியாவுக்கு புதுமையானவை அல்ல என்று கூறிய Proham ஆஸ்திரேலியா, ஹாங்காங், பிரிட்டன் போன்ற நாடுகள் சுயேச்சையான விசாரணை ஆணையங்களை அமைக்கின்றன எனத் தெரிவித்தது. அந்த ஆணையங்கள் பிரச்னைகளை ஆய்வு செய்து தவறு செய்த போலீஸ்காரர்களுக்கு எதிராக பொருத்தமான சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கின்றன.

“அத்தகைய சுயேச்சையான வெளிப்படையான அமைப்புக்கள் பொது மக்களுடைய எண்ணத்தைச் சரி செய்வதற்கும் தெளிவான சுதந்திரமான ஆய்வையும் வழங்குகின்றன,” என்றும் Proham கூறியது.

“அதன் காரணமாக கூட்டரசு அரசாங்கம் IPCMC என்ற போலீஸ் புகார்கள், தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையத்தை அமைப்பதோடு சுஹாக்காம் அதிகாரங்களை மறு ஆய்வு செய்து உட்பட சுயேச்சையான கண்காணிப்பு நடைமுறையை உருவாக்கவும் வேண்டும் என அது வலியுறுத்தியது.