டிவிட்டர்ஜெயா: சின்னப் பிள்ளைகளுடன் பாலியல் வல்லுறவு குழந்தை விளையாட்டல்ல

12 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டைப் புரிந்ததாக கண்டு பிடிக்கப்பட்ட 22 வயதான ஆடவர் ஒருவருக்கு பினாங்கு செஷன்ஸ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிக்காமல் போனதைக் கண்டு இணைய குடிமக்கள் ஆத்திரத்தையும் வெறுப்பையும் கொட்டியுள்ளனர்.

அந்தத் தீர்ப்பை எல்லாத் தரப்புக்களைச் சார்ந்த மக்களும் குறிப்பாக சமூக ஊடகங்களில் கடுமையாக குறை கூறியுள்ளனர். உடலுறவுக்கு 12 வயது சிறுமி இணங்கினார் என்ற கருத்தை ஜீரணிக்க முடியாமல் தாங்கள் தடுமாறுவதாக பலர் தெரிவித்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக அந்த வாதம் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதும் அவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ‘ஒளிமயமான எதிர்காலத்தைக் கொண்ட’ தேசிய bowling விளையாட்டாளரான’ நோர் அபிஸால் அஜிஸான் 13 வயது சிறுமியுடன் பாலியல் வல்லுறவு கொண்ட குற்றச்சாட்டில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட போதிலும் சிறைத்தண்டனையிலிருந்து தப்பினார்.

அந்தத் தீர்ப்புக்கள் குறித்து சமூக ஊடகப் பதிவுகளை உங்களுக்கு வழங்குகிறோம்

துவான் ஹாக் லியூ: 1999ம் ஆண்டு இணக்கமான, குதப்புணர்ச்சிக்கு 9 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்டவர் குறைந்த வயதினர் அல்ல. உடற்குறையுடையவரும் அல்ல. போதைப் பொருள் கொடுக்கப்பட்டவரும் அல்ல. ஆயுதங்களைக் கொண்டு மருட்டப்படவும் இல்லை.

டிடி கொன்ஸாலிஸ்: குதப்புணர்ச்சி முடியாது. ஆனால் பாலியல் வல்லுறவுக்கு ஆமாம். மலேசியாவுக்கு வாழ்த்துக்கள்

சூ சிங் பின்: இந்த நாடு மின்சாரத்தை நம்பியுள்ளது. ஆகவே எல்லா மின்சார தொழில் நுட்பர்களுக்கும் ஒளிமயமான எதிர்காலம் உண்டு.

நிக்கோலஸ் ஜெப்ரி: மலேசியா உங்களை வரவேற்கிறது. சிறுமிகளுடன் உடலுறவு கொண்டவுடன் நீங்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கும் நாடு இது.

கரோல் யோங்: குற்றச் செயல்கள் ஏன் அதிகமாக இருக்கின்றன என்று நான் வினவுகிறோம். கிரிமினல்கள் இந்தக் காலத்தில் மிகவும் துணிச்சலாக இயங்குகின்றனர். காரணம் குற்றத்தைச் செய்து விட்டு தப்பிக்க முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

முஸ்தாகிம் அப்துல் ரஹ்மான்: இதுதான் சட்டம்-நீங்கள் குற்றவாளி என்றால் நீங்கள் தப்பித்து விடலாம். நிரபராதி என்றால் நீங்கள் சிறைக்கு அனுப்பப்படலாம். தூக்கிலும் போடப்படலாம். கடந்த காலத்தை பார்க்காமல் இன்று நாம் இது போன்று மீண்டும் நிகழாது இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஜெகதீசன் முனியாண்டி: இதுதான் தண்டனை என்றால் LLB (Bachelor of Law)சட்டப்படிப்பு படிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஜோசுவா சாய்: 12 வயதுச் சிறுமிக்கு அந்த வயதில் எது நல்லது எது கெட்டது என்பது எப்படித் தெரியும் ? இது காமம். நேசமல்ல.

சிங் சித்து: சிறுமிகளுடன் உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் வக்கிரப் புத்தி கொண்டவர்களுக்கு இது பச்சை விளக்கு காட்டுவதற்கு ஒப்பாகும்.

சாம் துக் பாட்: நமது சட்ட அமைச்சரும், மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சரும் எங்கே போனார்கள் ? சட்டத்தை சிறு பிள்ளைகளையும் பாதுகாப்பதில் உங்கள் பங்கு என்ன ?

அண்ட்ரூ சான்: புதல்விகளை வைத்துள்ள பெற்றோர்களே எச்சரிக்கையாக இருங்கள் ! நாம் மகளிர் உரிமைகளும் குழந்தைகள் உரிமைகளும் அவசியமில்லாத மத்திய காலத்துக்கு திரும்பிக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு கற்புக் கவசத்தை அணிவியுங்கள்.

ஹோ சூக் வா: உண்மையில் வினோதமானது. ஒரு சிறுமியிம் உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. இளம் வயது சிறுமிகளைப் பாதுகாப்பதற்காகச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் இப்போது ஆண்கள் பாதுகாக்கப்படுகின்றனர்.

யாப் சி செங்: சின்னப் பிள்ளைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவது என்றால் என்ன அர்த்தம் என்பதே நீதிபதிகளுக்குத் தெரியவில்லை. அந்த விஷயத்தில் இணக்கம் என்பது பொருத்தமில்லாத விஷயம் என்பதைப் புரிந்து கொள்ள அவர்கள் மீண்டும் சட்டப் பள்ளிக்கு அனுப்பப்பட வேண்டும்.

ஜோஆன் மிச்சல்: இந்த போலே லாண்டில் எதுவும் நடக்கும். வெட்கக் கேடாக உள்ளது.

சொர்க்க வாசல்: நீதித் துறையின் போக்கில் ஏதோ கடுமையான கோளாறு ஏற்பட்டுள்ளது. சிறுமிகள் அவர்கள் இணக்கம் தெரிவித்தாலும் கூட எல்லா வழிகளிலும் பாதுகாக்கப்பட வேண்டும்.

சிந்தியா கோர்: குற்றம் சாட்டப்பட்டவர் மன நிலை சரியில்லாதவராக இருந்தால் தவிர இந்தத் தீர்ப்பு நல்லதல்ல. நமது கிரிமினல் நீதி பரிபாலன முறை சீரழிந்து விட்டது.