அமைச்சர்: சுவாராம் கணக்குகளில் சந்தேகம்

மனித உரிமைகளுக்காக போராடும் பிரபல என்ஜிஓவான சுவாராமுடன் தொடர்புகொண்டதாகக் கருதப்படும் சுவாரா இனிஷியேடிப் சென்.பெர்ஹாட் கணக்குகளில் நிறைய சந்தேகங்கள் எழுவதாக உள்நாட்டு வாணிக, கூட்டுறவு அமைச்சு கூறுகிறது.

மலேசிய நிறுவனங்கள் ஆணையத்தின் தொடக்கநிலை விசாரணைகளில் தெரியவந்துள்ள தகவல்கள்     அச்சந்தேகங்களைத்    தோற்றுவித்திருப்பதாக அதன் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி சிக் இன்று கூறினார்.

“தொடக்கநிலை ஆய்வுகள் சந்தேகத்தையும் குழப்பத்தையும் தருகின்றன. அதனால் விரிவாக ஆராய்வோம்”, என்றவர் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.

இன்னொரு நிலவரத்தில், அம்னோ வழக்குரைஞர் ஹவாரிஸம் ஹருன், சுவாராமுக்கு வரும் அந்நிய நிதி பற்றி பேங்க் நெகாரா, பணச் சலவை (Anti-Money Laundering) மற்றும் பயங்கரவாத நிதியுதவிச் சட்டத்தின்கீழ் விசாரணை செய்ய வேண்டும் என்றார்.

வெளிநாடுகளிலிருந்து, அமெரிக்கா, கனடா, பின்லாந்து போன்றவற்றிடமிருது பணம் பெற்றிருப்பதை ஒப்புக்கொண்டிருக்கும் சுவாராம் நிதி அளிப்பவர்களின் பெயர்களையும் அளிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்பதையும் வெளியிடவில்லை என்று ஹவாரிஸம் உத்துசான் மலேசியாவிடம் தெரிவித்தார்.

“அப்படிப் பெறப்பட்ட பணத்தைக் கணக்கில் காட்டப்படாத பணமாகக் கருதி பேங்க் நெகாரா நடவடிக்கை எடுக்கலாம்”, என்றாரவர்.

 

 

TAGS: