பிட்டத்தைத் திறந்து காண்பித்த மாணவன் கல்லூரியிலிருந்து நீக்கம்

செராசில் உள்ள தனியார் கல்லூரி, பலவற்றையும் ஆராய்ந்த பின்னரே மெர்டேகா நாளுக்கு முன்தினம் டாட்டாரான் மெர்டேகா பேரணியில் நாட்டுத்தலைவர்களின் படங்களுக்கு எதிரில் தன் பிட்டத்தைத் திறந்து காண்பித்த மாணவனைக் கல்லூரியைவிட்டு நீக்க முடிவு செய்தது என உயர்கல்வி அமைச்சர் காலிட் நோர்டின் கூறினார்.

அது சரியான முடிவுதான் என்று கருதும் அவர் அம்மாணவனின் செயல் அந்த உயர்கல்விக்கூடத்தின் பெயரைக் கெடுத்துவிட்டது என்றார்.

“அம்மாணவர் நீக்கப்பட்ட சம்பவம், மாணவர்களின் சட்டவிரோத செயல்களை அக்கல்லூரி பொறுத்துக்கொண்டிருக்காது என்பதைக் காண்பிக்கிறது”,என்றாரவர்.

-Bernama