போலீசார்: பெண்ணுக்கு கைவிலங்கு மாட்டப்பட்டது ‘மிகவும் லேசானது’

போலீசாரிடம் நேற்று சரணடைந்த 19 வயதுப் பெண்ணுக்கு போலீஸ்காரர்கள் கைவிலங்கு மாட்டியதை கோலாலம்பூர் போலீஸ் தலைபர் முகமட் சாலே ஆதரித்துப் பேசியிருக்கிறார்.

அந்த விஷயம் ‘சாதாரணமானது’ எனக் கருதப்பட்டது என்றும் முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாகவும் முகமட் ஒன்று நிருபர்களிடம் கூறினார்.

“ஒருவருக்கு கைவிலங்கு மாட்டுவது கைது செய்வதற்கான நடைமுறையாகும். அந்தப் பெண் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அது மிகவும் ‘லேசானது’ என நான் கருதுகிறேன். நாங்கள் நடைமுறைகளை கடுமையாகப் பின்பற்றியிருந்தால் அவருக்கு பின்புறம் கைவிலங்கு போடப்பட்டிருக்க வேண்டும்.”

“ஆகவே கைது நடவடிக்கையின் போது கைவிலங்கு போடுவது ஒரு பிரச்னையே அல்ல. எந்தக் கைது நடவடிக்கையிலும் சந்தேக்கத்துக்குரியவருக்குக் கை விலங்கு மாட்டப்பட வேண்டும்.”

“சட்டத்தில் அவ்வாறு தான் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குரிய ஒருவரை பிடிக்கும் போது கைவிலங்கை நாங்கள் பயன்படுத்துவது தவறு அல்ல,” என்றார் அவர்.

அவர் கோலாலம்பூரில் நிகழ்வு ஒன்றில் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு கோலாலம்பூர் போலீஸ் தலைவர் பதில் அளித்தார். அந்தப் பெண்ணுக்கு கை விலங்கு மாட்டப்பட்டுள்ள செய்திப் படம் அவருக்குக் காண்பிக்கப்பட்டது.

மெர்தேக்கா தினத்துக்கு முந்திய நாளன்று டாத்தாரான் மெர்தேக்காவில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் படத்தை மிதித்ததின் மூலம் 1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்தை மீறியுள்ளதாக அந்த பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.