காவல்துறையின் செயலைக் கண்டித்து புக்கிட் அமான் முன் ஆட்சேப மறியல்

ஜஞ்சி பெர்சே பேரணியின்போது, பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் புகைப்படத்தை இழிவுபடுத்தியதற்காக விரைந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், இதே மாதிரியான ஒரு சூழல் கிளந்தான் மந்திரி பெசாருக்கும் பினாங்கு மாநில முதல்வருக்கும் ஏற்பட்டபோது நடவடிக்கை எடுக்காதது ஏன் கூறி நாளை புக்கிட் அமான் முன் அரசு சார அமைப்புகள் ஆட்சேப மறியலில் ஈடுபடவிருக்கின்றன.

நாளை செப்டம்பர் 8 ஆம் தேதி பிற்பகல் 11.30 மணிக்கு கோலாலம்பூர் புக்கிட் அமான் அரச மலேசிய காவல்துறை தலைமை பணிமனை வளாகத்தின் முன்புறம் வர்கா அமான், பவர், ரப்பாட் உள்ளிட்ட 20 அரசு சார அமைப்புகள் இந்த ஆட்சேப மறியலில் ஈடுபடவுள்ளன.

பக்கச்சார்பற்ற முறையில் நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறையின் செயலைக் கண்டித்து கோரிக்கை மனுவொன்றும் இந்த ஆட்பேச மறியலின்போது புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்தில் வழங்கப்படவிருப்பதாக வர்கா அமான் பொதுச் செயலாளர் எஸ். பாரதிதாசன் செம்பருத்தியிடம் தெரிவித்தார்.

அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இழிவுபடுத்தப்பட்ட சம்பவங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் காவல்துறையினர் வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு காட்டுவதாக செம்பருத்தியிடம் சுட்டிக்காட்டிய பாரதிதாசன், நாளை நடைபெறவுள்ள ஆட்சேப மறியலில் அரசுசார அமைப்புகள் மட்டுமன்றி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவிருப்பதாக கூறினார்.

TAGS: