‘நஜிப்பின் வேடிக்கையான வியாபாரத்துக்கு பின்னணியில் உள்ள வேடிக்கையான அதிகாரிகள்

எம்ஆர்டி திட்டம் தொடர்பில் பிரதமர் நஜிப் ரசாக் ‘வேடிக்கையான வியாபாரத்தில்’ (perkara pelik pelik) ஈடுபடுகிறார் என தாம் சொன்னது உண்மையில் பிரதமருடைய அதிகாரிகள் ஆற்றும் பங்கு குறித்து மறைமுகமாகக் குறிப்பிடுவதாகும் என மலேசிய மலாய் வர்த்தக சங்கத் தலைவர் சையட் அலி அல்அத்தாஸ் இன்று விளக்கமளித்துள்ளார்.

“அவர்கள் ‘pelik-pelik’ அதிகாரிகள் என நான் நினைக்கிறேன். அவர்கள் அதிகமான வேலைகளுடன் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகின்றனர். ஆகவே அவர்கள் அதிகமான வேலைகள் இருக்கும் போது ‘pelik-pelik’ பரிந்துரைகளைப் பிரதமருக்கு தெரிவிக்கின்றனர்.”

“அடுத்து பிரதமர் அத்தகைய பரிந்துரைகளை வெளியிடுகிறார்,” என அவர் இன்று பிற்பகல் கோலாலம்பூரில் புக்கிட் டமன்சாராவில் உள்ள மலேசிய மலாய் வர்த்தக சங்கத் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

தமது வர்த்தக சங்கத்தை சார்ந்த உறுப்பினர் யாருக்கு எம்ஆர்டி குத்தகைகள் ஏதும் கிடைக்காத வேளையில் “வேடிக்கையான வியாபாரத்தில்” ஈடுபட வேண்டாம் என கடந்த திங்கட்கிழமையன்று சையட் அலி பிரதமருக்கு தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீது அண்மையில் நடத்தப்பட்ட வட்ட மேசைக் கருத்தரங்கு  முடிவுகளையே தமது அறிக்கை பிரதிபலித்துள்ளதாகவும் சையட் அலி கூறினார்.