‘அதிகாரிகள் தங்கள் ஆட்கள் மீது கட்டுப்பாட்டை இழந்திருக்கக் கூடும்’

பெர்சே 3.0 பேரணி நிகழ்ந்த தினத்தன்று ஏற்பட்ட ‘குழப்பத்தில்’ தங்களது ஆட்களில் சிலர் மீதான கட்டுப்பாட்டை தாங்கள் இழந்திருக்கக் கூடும் என்பதை அந்தப் பேரணியின் போது கடமையில் இருந்த முதுநிலை போலீஸ் அதிகாரி ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த அந்த ஆர்ப்பாட்டத்தின் போது மனித உரிமை அத்துமீறல்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவது தொடர்பில் சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் நடத்தும் விசாரணையில் போலீஸ் பேராளர் அந்த விவகாரம் பற்றி வினவிய போது “ஆம்” என ஏசிபி கார்த்திகேயன் வாசு ஒப்புக் கொண்டார்.

“கடமையை முடிக்க  வேண்டும் என்ற நெருக்குதல் காரணமாக அதிகாரிகள் மீதான கட்டுப்பாட்டுக்கு இடையூறு ஏற்பட்டிருக்கும்” சாத்தியம் உள்ளதா அல்லது இல்லையா என போலீஸ் பேராளர் ஏசிபி ஜமாலுதின் அப்துல் ரஹ்மான், கார்த்திகேயனை வினவினார்.