பிஎன் கள்ள நண்பர்களுக்குத்தான் சிலாங்கூர் பக்கத்தான் ஆட்சி சித்திரவதையாகும்

மாநில பக்கத்தான் ஆட்சி ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு சித்திரவதையாகத்தான் இருந்துள்ளது என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறியதை அதாவது “அம்னோ-பிஎன் கள்ள நண்பர்களுக்கு”, சிலாங்கூர் அரசு ஏற்றுக்கொள்கிறது என்று தெரிவித்துள்ளது.

“இத்துறையினர் (பக்கத்தான் ஆட்சியின் கீழ் பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவர்கள்) அம்னோ-பிஎன்னின் கள்ள நண்பர்களும் அவர்களின் குடும்பத்தினருமாவர். இவர்கள்  செயல்திட்டங்களை நேரடியாகப் பெறுதல், தகரர்களாகச் செயல்படுதல் போன்றவற்றின் மூலம் மாநிலத்திலிருந்து அவர்களின் சொத்தைச் சேகரித்துள்ளனர்”, என்று பேகா ஹுசின் இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

நேற்று, மாநில பிஎன் சட்டமன்ற பின்இருக்கை உறுப்பினர்களுடன் பேசுகையில் பக்கத்தான் ஆட்சியின்கீழ் மாநில மக்களுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. அவர்கள் மீண்டும் பிஎன்னை ஆதரிக்க தயாராகி விட்டார்கள் என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறியிருந்தார்.