இங்காவும் பக்காத்தான் எதிர்ப்பு வலைப்பதிவாளரும் நீதிமன்றத் தீர்வை கண்டுள்ளனர்

 தைப்பிங் எம்பி இங்கா கோர் மிங் sekupangdua என்ற புனை பெயரில் வலைப்பதிவுகளை எழுதும் அகமட் சோபியான் யாஹ்யாமீது சமர்பித்திருந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத் தீர்வு காணப்பட்டுள்ளது.

அந்தத் தீர்வின் கீழ் அகமட் சோபியான், இங்காவுக்கு எதிராகக் கூறிய எல்லா அவதூறுகளையும் மீட்டுக் கொண்டுள்ளதாக இங்காவின் வழக்குரைஞர் லியோங் சியோக் கெங் விடுத்த அறிக்கை தெரிவித்தது.

“இங்காவுக்கு எதிராக எதிர்காலத்தில் எந்த விதமான அவதூறு அறிக்கைகளையும் வெளியிடப் போவதில்லை என்றும் அவர் நீதிமன்றத்துக்கு வாக்குறுதி அளித்துள்ளார்,” என்றும் அவர் சொன்னார்.

அகமட் சோபியான் தமது வாக்குறுதியை மீறினால் அவர் மீது நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்படலாம் என்றும் லியோங் குறிப்பிட்டார்.

மேல் விவரங்களுக்காக லியோங் -உடன் தொடர்பு கொள்ளப்பட்டது. செலவுத் தொகைக்கும் அகமட் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் புண்படுத்திய கட்டுரையை மீட்டுக் கொள்ளுமாறும் உத்தரவிடப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

இந்தச் செய்தி எழுதப்படும் நேரத்தில் அகமட் சோபியானுடைய வலைப்பதிவில் அந்தக் கட்டுரை காணப்படவில்லை. இங்காவை பற்றிக் குறிப்பிட்ட அல்லது Nga Komeng எனக் குறிப்பிட்ட கட்டுரை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டதாகும்.

“Panas! Bongkar Nga Komeng dan Pakatan Rakyat Menyamun” என்னும் தலைப்பில் எழுதப்பட்ட அகமட் சோபியானின் கட்டுரைக்காக அவர் மீது 10 ரிங்கிட் அவதூறு வழக்கை இங்கா ஜனவரி மாதம் தொடுத்தார்.

அந்த விவகாரம் எப்படி தலைதூக்கியது

ஈப்போ மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு lounge suits-களை விநியோகம் செய்வதற்கான குத்தகையில் மாநில அரசாங்கம் தலையிட்டதாக கூறிக் கொண்ட அந்தக் கட்டுரையில் 2008ம் ஆண்டுக்கான ஈப்போ மாநகராட்சி மன்றக் கூட்டக் குறிப்புக்களின் பிரதிகள் இடம் பெற்றிருந்தன.

அப்போது பக்காத்தான் ராக்யாட் மாநில அரசாங்கமாக இருந்தது. அதில் இங்கா ஆட்சி மன்ற உறுப்பினராக இருந்தார்.

அந்தக் குத்தகையை குறைந்த தொகையைக் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு வழங்காமல் இங்கா மனைவி வோங் சியாவ் சிங் இயக்குநராக இருக்கும் தையல் நிறுவனமான Ethan & Elton Sdn Bhdக்கு கொடுக்கப்பட்டதாக அகமட் சோபியான் கூறிக் கொண்டார்.

அந்தக் குத்தகை வழங்கப்பட்டதில் தாம் சம்பந்தப்படவில்லை எனக் கூறிய இங்கா, தமது மனைவி அந்தத் தையல் நிறுவனத்தில் ‘உறங்கும் பங்காளி’ என வலியுறுத்தினார்.

அவரது கட்சியான டிஏபியும் அந்த விவகாரம் மீது அவரது விளக்கத்தை ஏற்றுக் கொண்டு விட்டது

இங்கா அவதூறு வழக்கு தாக்கல் செய்த ஒரு மாதம் கழித்து அகமட் சோபியான் 11 மில்லியன் ரிங்கிட் எதிர் வழக்கைத் தொடர்ந்தார்.