பிரதமர் துன் அப்துல் ரசாக் கலந்து கொண்ட பெக்கான் கூட்டத்திற்கு பெரும் திரளாக மக்கள் வந்திருந்தனர் என்ற தோற்றத்தை அளிப்பதற்காக நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸில் வெளியான படம் ஒன்று ஜோடிக்கப்பட்டுள்ளதாக இணைய மக்கள் கருதுகின்றனர்.
திருத்தப்பட்டதாகக் கூறப்படும் அந்தப் படத்தில் பின்னணியில் கூட்டத்தில் ஒரு பகுதியினர் இரண்டு முறை காட்டப்பட்டுள்ளனர். அந்தப் படம் பத்திரிக்கையின் ஞாயிறு பதிப்பில் வெளியானதும் முகநூலில் அந்தப் படம் பரவத் தொடங்கியது.
அந்தப் படம் பக்காத்தான் ஆதரவு வலைப்பதிவாளர் மிலோசுவாம் உட்பட பல பிரபலமான வலைப்பதிவாளர்களையும் கவரத் தொடங்கியது. அந்த படம் இயற்கைப் புறம்பான அதிசயங்களுக்கு ஒர் உதாரணம் என அவர் சொன்னார்.
“நீங்கள் உங்கள் கண்களைத் திறந்து கவனமாக பாருங்கள். நஜிப்புக்குப் பின்னால் குறைந்தது 10 பேய்கள் இருப்பது உங்களுக்குத் தெரியும்,” என அவர் கூட்டம் இரட்டிப்பாக்கப்பட்டது பற்றிக் கிண்டலாகக் கூறினார்.
இதனிடையே அந்தப் படத்தை திருத்தியதற்குப் பின்னணியில் இருப்பதாக கூறப்படும் வரைபடக் கலைஞர் தம்மிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என moniker Kukubesi என இணையத்தில் அழைக்கப்படும் பிரபலமான வரைபட வடிவமைப்பாளர் கூறினார்.
“அவர் நல்ல முறையில் படங்களை எடிட் செய்வதற்கு என்னுடைய வகுப்புக்களில் சேரலாம்.” என அவர் முகநூலில் தெரிவித்துள்ளார்.
Kukubesi ஏற்கனவே தகவல் அமைச்சு தயாரித்த மெர்தேக்கா சின்னம், மிகவும் தரக் குறைவாக இருப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
பெர்னாமா படம் ?
‘நஜிப்: தேர்தலில் அம்னோ வெற்றி பெறுவதற்கு ஐக்கிய முன்னணி அவசியம்’ என்ற தலைப்பில் செப்டம்பர் 16ம் தேதி வெளியான செய்தியுடன் அந்தப் படம் நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் இணையத் தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தப் படம் இப்போது அகற்றப்பட்டு விட்டது.
கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ந்த நஜிப் பெக்கான் கூட்டத்தில் 15,000 மக்கள் கலந்து கொண்டதாக அந்தச் செய்தி குறிப்பிட்டது.
அந்தப் படம் தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் படம் என uppercaise என்ற இன்னொரு வலைப் பதிவாளர் கூறிக் கொண்டார். ஆனால் அந்தச் செய்தியை உறுதி செய்ய முடியவில்லை.
நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் குழும நிர்வாக ஆசிரியர் அப்துல் ஜலில் ஹமீட்-உடன் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகளும் பலன் தரவில்லை.
நஜிப் கூட்டத்தினருடன் காணப்படுவதைக் காட்டும் படத்தின் உண்மை நிலை குறித்து இப்போது இரண்டாவது முறையாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கடந்த சம்பவத்தில் புத்ராஜெயாவில் நஜிப் நடத்திய திறந்த இல்ல உபசரிப்பு பற்றிய பெர்னாமா படம் சம்பந்தப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டை பெர்னாமா மறுத்துள்ளது.