சுவா: பண அரசியல் ஊழல் அல்ல

பண அரசியல் ஊழல் என  மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறுகிறார்.

மசீச-வைச் சேர்ந்த துணை அமைச்சர் ஒருவர் மீது தாம் சுமத்தியுள்ள பண அரசியல் எனக் கூறப்படுவது மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என பிகேஆர் வழங்கியுள்ள யோசனைக்கு சுவா பதில் அளித்தார்.

புத்தாண்டின் போது பொருட்களை வாங்குவது பண அரசியலுக்கு ஒர் எடுத்துக்காட்டு ஆகும். அதனை ஊழலாக கருத முடியாது என்றார் சுவா.

கடந்த சனிக்கிழமையன்று ஈப்போவில் நிகழ்ந்த விருந்து நிகழ்வு ஒன்றில் சுவா நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அந்த அதிர்ச்சியூட்டும் பதிலை சுவா வழங்கினார்.

அந்தத் தகவலை ஒரியண்டல் டெய்லி என்னும் சீன நாளேடு இன்று வெளியிட்டுள்ளது.

சுவா ஏற்கனவே ‘பெண் துணை அமைச்சர்’ பண அரசியலில் ஈடுபடுவதாக தமக்கு கிடைத்த புகார்களை மேற்கோள் காட்டி குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் பின்னர் அவர் தாம் பொதுவான அறிக்கையையே விடுத்ததாகவும் குறிப்பிட்ட எந்த நபரையும் நோக்கமாகக் கொண்டதல்ல என்றும் சுவா தெரிவித்தார்.

மகளிர், குழும்பம் சமூக மேம்பாட்டுத் துணை அமைச்சர் ஹெங் சியா கீ மட்டுமே மசீச-வின் ஒரே பெண் துணை அமைச்சர் ஆவார். தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

சுவா அறிக்கையைத் தொடர்ந்து அந்த விஷயத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்யுமாறு பிகேஆர் அவரைக் கேட்டுக் கொண்டது.