ஒங்: உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஹெங் குறை கூறப்பட்டுள்ளார்

மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், மூத்த மசீச தலைவர் ஒருவர் பண அரசியலில் ஈடுபடுவதாக  குற்றம் சாட்டும் போது உரிய நடைமுறைகளை ஒதுக்கி விட்டதாக முன்னாள் மசீச தலைவர் ஒங் தீ கியாட் கூறுகிறார்.

சுவா தமது செக்ஸ் வீடியோ விவகாரம் கசிந்த போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு ஒழுங்கு வாரியத்தை தாம் எதிர்நோக்கியதை சுவா அறிந்திருக்க வேண்டும் என ஒங் நேற்றிரவு நிருபர்களிடம் சொன்னார்.

“கட்சி ஆளுமை என வரும் போது அது தான் நடைமுறை. சுவா, செக்ஸ் வீடியோ விவகாரம் மீது மசீச ஒழுங்கு வாரியத்துக்கு அனுப்பப்பட்ட போது பேசுவதற்கும் விளக்கமளிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.”

முறைகேடாக நடந்து கொள்வதாக பெண் துணை அமைச்சர் மீது குற்றம் சாட்டுவதற்கு முன்னர் ஒரளவு கவனம் செலுத்தப்பிடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார் அவர்.

சுவா அறிக்கை தமக்கு ‘அதிர்ச்சி அளித்து விட்டது’ என குறிப்பிட்ட ஒங், “அரசாங்கத்தில் கட்சியைப் பிரதிநிதிக்கும் துணை அமைச்சர் ஒருவர்” சம்பந்தப்பட்டிருப்பதால் மிகவும் முக்கியம் என்றார்.

அவர் அமானா எனப்படும் Angkatan Amanah Rakyat பாண்டான் இண்டாவில் ஏற்பாடு செய்திருந்த வண்ண விளக்கு விழா- நோன்புப் பெரு நாள் கொண்டாட்டங்களில் பேசினார்.

தமது பாண்டான் நாடாளுமன்றத் தொகுதியை தக்க வைத்துக் கொள்வதற்குப் போட்டியிட விரும்புவதாகவும் ஒங் சொன்னார். என்றாலும் தம்மை முன்மொழிவது பாரிசான் நேசனல் தலைமைத்துவத்தைப் பொறுத்தது என்றார் அவர்.

அவரது கருத்தை அந்த நிகழ்வில் கலந்து கொண்ட குவா மூசாங் எம்பி-யும் அமானா தலைவருமான தெங்கு ரசாலி ஹம்சா ஒப்புக் கொண்டார்.

வேட்பாளராக ஒருவர் தெரிவு செய்யப்படுவது கட்சித் தலைமைத்துவத்தைப் பொறுத்தது என்றும் அந்த மூத்த அரசியல்வாதி குறிப்பிட்டார்.