அமைச்சருக்கு எதிராக சுவாராம் போலீசில் புகார் செய்தது

Suara Inisiatif கணக்குகள் தொடர்பான விசாரணைகளில் தலையிட்ட சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் சுவாராம் உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் மீது இன்று போலீசில் புகார் செய்தது.

தீய நோக்கத்துடன் தொழில் முறைக்கு மாறாக நடந்து கொண்டதாக கூறப்படுவது மீது அமைச்சரை போலீஸ் விசாரிக்க வேண்டும் என அந்த மனித உரிமை போராட்ட அமைப்பு விரும்புவதாக சுவாராம் ஒருங்கிணைப்பாளர் ஆர் தேவராஜன் கூறினார்.

சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையம் அந்த விஷயத்தை இன்னும் புலனாய்வு செய்து கொண்டிருக்கும் வேளையில் அந்த அரசு சாரா அமைப்பு மீது குற்றம் சாட்டப்படும் எனக் கூறியது உட்பட பல அறிக்கைகளை அமைச்சர் விடுத்துள்ளதாக அவர் சொன்னார்.

அமைச்சர் சொன்னது உண்மையென நிரூபிக்கப்படாத வேளையில் அமைச்சர் மீது கிரிமினல் அவதூறு குற்றம் சாட்டப்பட வேண்டும் என தேவராஜன் பெட்டாலிங் ஜெயா போலீஸ் நிலையத்தில் புகார் செய்வதற்கு முன்னர் கூறினார்.

 

TAGS: