கோலாலம்பூரில் உள்ள வான் போக்குவர்த்து மய்யத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வாரம் ஒரு மணி நேரத்துக்கு விமானங்கள் மீதான கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகக் கூறப்படுவதை சிவில் வான் போக்குவத்துத் துறை இன்று நிராகரித்துள்ளது.
“மின் விநியோகத் தடை ஏற்பட்டதால் ராடார் இயங்காமல் போனது,” என்பதை அதன் தலைமை இயக்குநர் அஸாருதின் அப்துல் ரஹ்மான் மலேசியாகினியிடம் ஒப்புக் கொண்டார்.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு முறையில் எந்தக் கோளாறும் இல்லை என வலியுறுத்திய அவர் மின் தடையே அதற்குக் காரணம் என்றார்.
அந்த மின் தடை ஏற்பட்ட போது யாரும் அதனை உணரவில்லை. என அவர் விளக்கினார்.
அதனை நிலை நிறுத்துவதற்கு தயார் நிலையில் இருந்த மின் விநியோகம் உதவி செய்தது. ஆனால் யூபிஸ் பாட்டரி விநியோகம் தீர்ந்ததும் ராடார் இயங்கவில்லை.
அனைத்து வானொலித் தொடர்புகளும் இழக்கப்பட்டதாக இன்று காலை பிகேஆர் கூறிய குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்தார்.
விமானப் போக்குவரத்து மேற்பார்வையாளர்கள் “guard” வானொலி அலைவரிசையைப் பயன்படுத்தி விமானங்களுடன் தொடர்பு கொண்டனர்.
“ராடார் இயங்காமல் போனதும் நாங்கள் விமானப் பாதைகளை நாங்கள் வானொலி வழி சுயமாக உத்தரவுகளை வெளியிட்டோம்.”
“கட்டுப்பாடு அந்நிய மய்யங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை”
விமானங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை அந்நிய மய்யங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுவதையும் அவர் மறுத்தார். பாதுகாப்பு வழிகாட்டிகளுக்கு இணங்க ராடார் வசதிகளை பெற்றிருந்த பட்டர்வொர்த் ஆகாயப் படைத் தளத்தில் உள்ள அரச மலேசிய ஆகாயப் படைக்கு தயாராக இருக்குமாறு உத்தரவிடப்பட்டது என்றார் அவர்.
செப்டம்பர் 12ம் தேதி அதிகாலை மணி 2.50க்கு நிகழ்ந்த அந்த சம்பவத்தில் மூன்று விமானங்கள் மட்டுமே நேரடியாகப் பாதிக்கப்பட்டன.
“நாட்டுக்குள் வந்த ஒரு விமானம் வெற்றிகரமாக தரை இறங்கியது. நாட்டிலிருந்து புறப்படவிருந்த இரண்டு விமானங்களை நாங்கள் தாமதப்படுத்த வேண்டியிருந்தது,” என அஸாருதின் சொன்னார்.
“பாதுகாப்பு காரணங்களுக்காக நாங்கள் அதனை செய்ய வேண்டியிருந்தது.”
ராடார் இல்லாத போதும் அவசர நடவடிக்கைகளும் பின்புலங்களும் தயாராக இருந்தன. அவை இயங்கின என்றும் அவர் சொன்னார்.
மின் தடை சரி செய்யப்பட்டதும் வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு முறை மீண்டும் இயங்கத் தொடங்கியதாகவும் அஸாருதின் குறிப்பிட்டார்.