“நஜிப் ஏன் தமிழில் கடிதங்களை அனுப்பவில்லை ? இந்தியர்கள் பகைமைப் போக்கை கொண்டிருக்கவில்லை என்பது காரணமா ? அல்லது அவர் இந்தியர்களை பற்றிக் கவலைப்படவில்லை என அர்த்தமா ?”
“பகைமைப் பண்பாட்டை கைவிடுமாறு பிரதமர் சிலாங்கூர் இளைஞர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்”
ஒப்பா: 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷா அலாமில் ‘முஸ்லிம் பகுதி’ ஒன்றுக்கு கோயில் ஒன்று மாற்றப்படுவதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மாட்டுத் தலை ஒன்றை ஷா அலாம் பள்ளிவாசல் ஒன்றிலிருந்து மந்திரி புசார் அலுவலகம் வரைக்கும் கொண்டு சென்றனர். அவர்களில் சிலர் மாட்டுத் தலையை மிதித்ததுடன் எச்சிலையும் துப்பியுள்ளனர்.
மலேசியாகினி வெளியிட்ட செய்தியின் படி “அந்தச் சர்ச்சைக்காக ஷா அலாம் ‘மாட்டுத் தலை’ ஊர்வலத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பழி போட முடியாது” என நமது உள்துறை அமைச்சர் அந்த நேரத்தில் கூறினார்.
“அவர்கள் தங்கள் குரலுக்கு செவிசாய்க்கப்பட வேண்டும் என்று மட்டுமே விரும்பினர்,” என்றும் ஹிஷாமுடின் சொன்னார். ஆகவே எப்படி திடீரென ” பிஎன் மீதான ‘பகைமைப் போக்கை’ கைவிடுமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.
பி தேவ் ஆனந்த் பிள்ளை: அன்புள்ள பிரதமர் அவர்களே, மலாய் உரிமை நெருக்குதல் அமைப்பான பெர்க்காசாவிடம் நீங்கள் அந்த அறிவுரையை வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தக் காலத்தில் இளைஞர்களை ஏமாற்றி அடிபணிய வைக்க முடியாது. உண்மை எல்லாருக்கும் தெரியும். உங்களிடம் எல்லா வசதிகளும் இருக்கலாம். ஆனால் உண்மை உங்கள் பக்கம் இல்லை.
ஒடின்: நஜிப் கவர விரும்பும் இளைஞர்கள் இணைய கால கட்டத்தைச் சார்ந்தவர்கள். உண்மை நிலையை உணர மறுக்கும் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோருக்கு அவர் யார் என்பது தெரியும்.
அடையாளம் இல்லாதவன்1234: ஆ ஜிப் கோர் (சகோதரர் நஜிப்) மலேசிய இளைஞர்களை ஏமாற்ற முயல வேண்டாம். நீங்கள் எங்களிடம் சில முறை பொய் சொல்லலாம். எல்லா நேரத்திலும் அல்ல.
நீங்கள் நினைப்பதைப் போல நாங்கள் ஊமையில்லை. நாங்கள் இரண்டு பக்க கதையையும் வாசிக்கிறோம். அதற்கு பின்னரே எது சரி எது தவறு எது நியாயம் எது அநியாயம் என்பதை முடிவு செய்கிறோம்.
பிஎன் மலாய்க்காரர்களிடம் ஒன்றும் மலாய்க்காரர்கள் அல்லாதாரிடம் இன்னொன்றும் சொல்கிறது.அதிலிருந்து உங்களையும் பிஎன் உண்மை நிலையையும் நாங்கள் உணர முடியும்.
கோல்ப் பந்து: பகைமைப் போக்கை நாம் நிலை நிறுத்த வேண்டும் என நஜிப் சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன். அதனால் அம்னோ கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களைத் தாக்க வேண்டாம் என கூலிக்கு அமர்த்தப்பட்டுள்ள உங்கள் குண்டர்களுக்கு கூறுங்கள்.
மறந்து விட வேண்டாம். 13வது பொதுத் தேர்தலில் நீங்கள் தோல்வி கண்டால் உங்கள் அலுவலகத்தை அமைதியான முறையில் புதிய பிரதமரிடம் ஒப்படைத்து விடுங்கள்.
யம்: அந்தக் கடிதத்தை அனுப்பவும் குறுஞ்செய்தி வழி எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லவும் என்னுடைய பெயர், முகவரி, பிறந்த தேதி, என் கைத் தொலைபேசி எண் ஒர் அரசியல் கட்சிக்கு எப்படிக் கிடைத்தது ? புள்ளிவிவர ரகசியச் சட்டம் என்னவானது ?
கொதிக்கும் மண்: சிலாங்கூர் இளைஞர்கள் சிரித்துக் கொண்டே அந்த வேண்டுகோளைப் புறக்கணித்தால் என்ன செய்வது ? அவர்களுக்கு கைவிலங்கு மாட்டி அவர்களுடைய சொந்தப் பாதுகாப்புக்காக அவர்களை ஜெயிலில் போடுங்கள்.
சிந்தாமன்: நஜிப் ஏன் தமிழில் கடிதங்களை அனுப்பவில்லை ? இந்தியர்கள் பகைமைப் போக்கை கொண்டிருக்கவில்லை என்பது காரணமா ? அல்லது அவர் இந்தியர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை என அர்த்தமா ?
ஒஎம்ஜி: கண்ணாடி வீட்டுக்குள் வாழ்கின்றவர்கள் கல்லை எறியக் கூடாது. குண்டர்களையும் ரௌடிகளையும் நிறுத்துங்கள். பொதுப் பாதுகாப்பை வலுப்படுத்துங்கள். குற்றச் செயல்களைக் குறையுங்கள். ஊழலை துடைத்தொழியுங்கள். பின்னர் உங்கள் குரலுக்குச் செவி சாய்க்கப்படும் வாய்ப்பு உள்ளது.