சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் பில்லியன் கணக்கான ரிங்கிட் செல்வத்தை சேர்த்து விட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நிராகரித்துள்ளார்.
“எல்லா விதமான குற்றச்சாட்டுக்களும் கூறப்பட்டுகின்றன. அவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை,” என அவர் இன்று காலை நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் கூறினார்.
15 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள செல்வத்துடன் நாட்டின் மிகவும் பணக்கார மனிதராக முதலமைச்சர் திகழ்கிறார் என பிஎம்எப் எனப்படும் புருனோ மான்சோர் நிதி அமைப்பு வழங்கியுள்ள அறிக்கை பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த போது நஜிப் அவ்வாறு தெரிவித்தார்.
புருனோ மான்சோர் நிதி ஸ்விட்சர்லாந்தைத் தளமாகக் கொண்ட அரசு சாரா அமைப்பாகும்.