மாந்தனின் வாழ்வு என்பது வரலாற்றின் குறியீடாக அமைந்துள்ளது. காலத்தின் தேவைக்கேற்ப அவனது சிந்தனை, சொல், செயல், ஆகிய அனைத்தும் வரலாற்றுச் சான்றுகளாக உருவெடுக்கின்றன. மாந்தன் தம் வாழ்வில் எதிர்கொண்ட சிறு துரும்புகள் முதற்கொண்டு மிகப்பெரிய கற்பாறைகள் வரையிலான யாவும் வரலாறாக அமைகின்றன. இன்றைய வாழ்வு நாளைய வரலாறாகும் என்பது வரலாற்றுக்கான அடிப்படைக் கூறாகும்.
தமிழர்களின் மூதாதையர் இம்மண்ணில் இத்தகைய வாழ்வினை வாழ்ந்தவர் என்பதற்குரிய சான்றுகள் பலவற்றினை இழந்துவிட்டோம். எஞ்சியுள்ள சிலவற்றினைப் போற்றிக் காக்க வேண்டியது இன்றைய தமிழர்களின் கடமையாகும்.
இதற்குரிய முயற்சியாகத் ‘தமிழர் தடங்கள் : வரலாற்று ஆவணம்’ என்னும் நூல் வெளியிடப்பட உள்ளது. மலேசிய நாட்டின் வரலாற்றுக் கட்டுரையாளர் சீ. அருண் அவர்கள் இந்நூலை எழுதியுள்ளார். மலேசியத் தமிழர் வரலாற்று ஆய்வகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.
ஆவணங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தமிழில் வெளிவரும் உலகின் முதல் நூல் என்னும் பெருமையை இந்நூல் கொண்டுள்ளது.
மலேசியத் தமிழர் வரலாற்று ஆய்வகமும் மலேசிய இந்தியர் குரல் இயக்கமும் இணைந்து இந்நூலின் வெளியீடு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அனைவரும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
தேதி/ நாள் : 23-09-2012 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை மணி 5.00 தொடக்கம்
இடம் : திருவள்ளுவர் மண்டபம், கிள்ளான் துறைமுகம்.
தொடர்புக்கு : திரு. கெ. வடிவேலன் 012-2690588 / திரு. சீ. அருண் 012-3002911