எம்ஏசிசி தலைவரை ‘வலுப்படுத்த’ அரசமைப்பு மாற்றங்கள் நாடப்படுகின்றன

எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு பதவிக்காலப் பாதுகாப்பை வழங்கும் பொருட்டு அரசமைப்பு திருத்தம் ஒன்றை ஊழல் மீதான சிறப்பு இரு தரப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது..

அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் நிலையை “நீதிபதி ஒருவருடைய நிலைக்கு” உயர்த்துவது அந்தப் பரிந்துரையின் நோக்கம் என அந்தக் குழுவின் தலைவரும் கங்கார் எம்பி-யுமான முகமட் ராட்ஸி ஷேக் அகமட் கூறினார்.

“இப்போது  எம்ஏசிசி தலைவரை அகோங் நியமிக்கிறார். ஆனால் அரசியல் மற்றும் இதர அழுத்தங்களினால் அவர் அகற்றப்பட முடியும்,” என அவர் இன்று நிருபர்களிடம் கூறினார்.