கோலாலம்பூரில் பேரணி ஒன்றை நடத்தியுள்ள சீனக் கல்வி போராட்ட அமைப்பான டோங் ஜோங் பொறுப்பில்லாதது என கல்வித் துணை அமைச்சர் புவாட் ஸார்க்காஷி கூறுகிறார்.
கல்வி அமைச்சு தாய்மொழிப் பள்ளிக்கூடங்களுக்கும் தேசியப் பள்ளிக்கூடங்களுக்கும் அரசாங்கம் போதுமான உதவிகளையும் ஒதுக்கீடுகளையும் வழங்கியுள்ளதாக அவர் சொன்னார்.
“அவர்கள் பொறுப்பற்றவர்கள் என நான் கூற முடியும். தாய்மொழிப் பள்ளிகளுக்கு உதவ நாங்கள் நிறையச் செய்துள்ளோம். ஆனால் அவர்கள் இன்னும் கோரிக்கைகளை விடுக்க விரும்புகின்றனர்.”
“ஆசிரியர்கள், ஒதுக்கீடுகள் பற்றாக்குறை விஷயத்தில் நாங்கள் அவற்றைத் தீர்த்து விட்டோம். J-Qaf ( இஸ்லாமிய அடிப்படைக் கல்வி ) ஆசிரியர்கள் விஷயத்திலும் நாங்கள் பற்றாக்குறையைத் தீர்த்துள்ளோம்,” என அவர் மலேசியகினியிடம் சொன்னார்.