கோ: பினாங்கில் ஒன்றும் இல்லாதிருக்கும் நிலையை உடைத்தெறிய வேண்டும்

கெராக்கான் தலைவர் கோ சூ கூன், பினாங்கில் கடந்த பொதுத் தேர்தலில் ஒரு இடத்தைக்கூட வெல்ல முடியாதபடி முற்றாக துடைத்தொழிக்கப்பட்ட களங்கத்தைத் துடைக்கக் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் ஒன்றுசேர வேண்டும் என  உருக்கமாக வேண்டிக் கொண்டிருக்கிறார்.

“பினாங்குதான் என்றுமே கெராக்கானின் இதயம்.அம்மாநிலத்தையும் மலேசியாவையும் மாற்றுவதற்குச் சேவையாற்ற நமக்குக் கிடைத்த வாய்ப்பை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம்.  அம்மாநிலத்தையும் மாநில மக்களையும் என்றென்றும் நினைவில் வைத்துக் கொண்டிருப்போம்.

“நாம் ஒரு மனத்துடன் செயல்பட்டால் ஒன்றுமில்லாதிருக்கும் நிலையை உடைத்தெறிய மக்கள் நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை நிச்சயம் கொடுப்பார்கள். பினாங்கு மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என்ற எண்ணம் நமக்குண்டு”.இன்று காலை கெராக்கானின் 41-வது தேசிய பேராளர் கூட்டத்தில் கோ பேசினார்.

பினாங்கு, கெராக்கானின் சாதனைகளுக்கு என்றென்றும் சான்றாக விளங்கும் என்றாரவர்.

“பினாங்கிலும் மற்ற இடங்களிலும் (பக்காத்தான் ரக்யாட்டின்) வண்டவாளங்கள் அம்பலமாகியுள்ளன.நான்காண்டுகளாக நம்மைத் தாக்கிக் கொண்டிருந்தார்கள்.இனி, நாம் திருப்பித் தாக்கும் நேரம்.

“கெடாவையும் சிலாங்கூரையும் ஏன் கிளந்தானையும்கூட திரும்பக் கைப்பற்ற பாடுபடுவோம்.அதே வேளையில் மாற்றுத்தரப்பினரின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் பேராக்கையும் ஜோகூரையும் சாபாவையும் தற்காக்கும் முயற்சியிலும் ஈடுபட வேண்டும்”, என்றாரவர்.

இரண்டு கட்சி ஆட்சிமுறையை கெராக்கான் ஆதரிக்கிறது என்று கூறிய கோ, மக்கள்தான் இரண்டு தரப்பின் தலைவர்களை அடிப்படையாக வைத்து முடிவு செய்ய வேண்டும் என்றார்.

“சிலர் அன்வார் இப்ராகிமை (மாற்றரசுக் கட்சித் தலைவர்) நம்பக்கூடும். ஆனால், எனக்கு (பிரதமர்) நஜிப் அப்துல் ரசாக்தான்.அவர்தான் நடபுணர்வுடன் பழகுவார்.ஆனால், அதைவிட முக்கியமாக நேர்மையானவர், உறுதியானவர்”.

ஒரு கசப்பான அனுபவம்

தம் தரப்பை வலியுறுத்த 1997-இல் அன்வார் துணைப்பிரதமராகவும் நஜிப் கல்வி அமைச்சராகவும் இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை கோ நினைவு கூர்ந்தார்.

“நான்  முதலமைச்சராக இருந்தபோது பினாங்கில் கல்வி இயக்குனர் பதவி காலியானது.ஏனென்றால் அப்பதவி வகித்தவர் பணி ஓய்வு பெற்றுவிட்டார்.  துணை இயக்குனராக இருந்தவர்தான் அடுத்து அப்பதவியை ஏற்க வேண்டியவர். அவர் ஒரு சீனர். ஒன்றரை ஆண்டுகள்தான் அவரும் அப்பதவியில் இருக்க முடியும். அதன் பின்னர் பணி ஓய்வு பெறுவார்.
“ஆனால் அன்வார், அவரைக் காட்டிலும் ஏழாண்டுகள் ஜூனியரான ஒரு அதிகாரிக்குத்தான் அப்பதவியைக் கொடுக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். நான் அது நியாயமில்லை என்றேன் ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் அவரைப் பணி உயர்த்தலாமே என்றேன்……அவர் மறுத்தார். ‘இல்லை.இதுதான் என் முடிவு’என்று சொல்லி விட்டார்”.

அதன்பின் கோ, நஜிப்பை நாடிச் சென்றார்.அவர் நடந்ததையெல்லாம் செவிமடுத்த பின் அது நியாயமில்லை என்றார். அப்போதிருந்த துணை இயக்குனரையே இயக்குனராக பதவி உயர்த்துமாறு கடிதம் எழுதினார்.

“இது நஜிப்பின் ‘janji ditepati’  (வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன) என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்று கோ குறிப்பிட்டார். இதை அறிந்து அன்வார் தம்மீது எரிந்து விழுந்தார் என்றும் அவர் சொன்னார்.

“இப்போது சொல்லுங்கள், யாரை நம்புவீர்கள்?”, என்றவர் வி

TAGS: