மலாக்கா முதலமைச்சர் முகமட் அலி ரூஸ்தாமின் புதல்வருடைய விரிவான திருமண ஏற்பாடுகள் குறித்து எழுந்துள்ள கண்டனங்கள் தொடர்பில் முதலமைச்சருக்கு ஆறுதல் சொல்ல அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் ஹுசேன் திட்டமிடுகிறார்.
தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருப்பதால் இது போன்ற விஷயங்களை எதிர்பார்க்கத் தான் வேண்டும் என ஹிஷாமுடின் இன்று நிருபர்களிடம் கூறினார்.
“இந்த தேர்தல் காலத்தில் எதுவும் பிரச்னையாகி விடும். தலைவர் ஒருவர் வேறு ஒரு காலத்தில் தமது புதல்வருடைய திருமண விருந்தை நடத்தியிருந்தால் அது பிரச்னையாகவே மாறியிருக்காது.”
“நான் டத்தோ ஸ்ரீ அலி-யை நாளை சந்திக்கப் போகிறேன். இது அரசியல் காலம் என்பதால் ஏமாற்றம் அடைய வேண்டாம் என அவரிடம் சொல்வேன். நாங்கள் அனைவரும் புரிந்து கொண்டுள்ளோம்,” என்றார் அவர்.
“என் குடும்பம் உட்பட எங்களது எல்லாக் குடும்பங்களும் அதனை அனுபவித்துள்ளன.”
அந்த விவகாரம் மலாக்காவில் அம்னோ நிலையைப் பாதிக்கும் என அவர் கருதுகிறாரா என வினவப்பட்ட போது உள்துறை அமைச்சருமான ஹிஷாமுடின் அவ்வாறு பதில் அளித்தார்.