“முதியவர்களை முட்டாளாக்க முடியவில்லை. அதனால் போலீசார் இப்போது பிள்ளைகளை முட்டாளாக்க முயலுகின்றனர். காரணம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தங்கள் காப்பாளர் பதவியில் இருப்பர் என அவர்கள் நம்புகின்றனர்.’
“பெர்சே, சுவாராம், பிஎஸ்எம் ஆகியவை தீயவை என போலீஸ் பள்ளிப் பிள்ளைகளிடம் கூறியது.
ஈப்போகிரைட்: அந்தப் போலீஸ் அதிகாரிகள் நாட்டின் தேசியப் பாதுகாப்புக்காக தடுத்து வைக்கப்பட வேண்டும்.
நமது போலீஸ் அதிகாரிகள் பொய்களைச் சொல்லி நமது சொந்த குடிமக்களிடையே பிளவை ஏற்படுத்த முயலுவர் என நான் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை.
அவர்களுடைய சம்பளம் நமது வரிப்பணத்திலிருந்து கொடுக்கப்படுவதை எண்ணும் போது இன்னும் ஆத்திரமாக வருகின்றது.
செமினி தமிழ்ப் பள்ளிக்கூடம் ஒன்றில் அவர்கள் நடந்து கொண்ட விதம் போலீஸ் பெரிய அரக்கனாக மாறி விட்டதையே காட்டுகின்றது.
ஷத்திரியன்: அந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளுடைய நடத்தையில் எந்த வியப்பும் இல்லை. காரணம் போலீஸ் வெகு காலத்துக்கு முன்பே அம்னோ கருவியாகி விட்டது.
நாட்டில் குற்றச் செயல்கள் பெருகி வருவதற்கான காரணமும் இப்போதுதான் புரிகிறது. இது தொடருமானால் பொது மக்களிடமிருந்து போலீஸ் எந்த மரியாதையையும் எதிர்பார்க்க முடியாது.
மலேசிய இனக் குழந்தை: சோஷலிசத்துக்கும் கம்யூனிசத்துக்கும் இடையிலான வேறுபாடுகளை விளக்குமாறு அந்த போலீஸ் அதிகாரிகளைக் கேளுங்கள். தாங்கள் ஏதும் தெரியாதை சீருடை அணிந்த குண்டர்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்து விடும் என அஞ்சி அவர்கள் தங்கள் துப்பாக்கிகளைக் கொண்டு தங்களையே தலையில் சுட்டுக் கொள்வர்.
யாஹு: அந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளும் தங்கள் விளக்கத்தின் போது எல்லையைத் தாண்டியதும் பெற்றோர்களும் மாணவர்களும் உடனடியாக வெளிநடப்புச் செய்திருக்க வேண்டும்.
12 வயது மாணவர்களுக்கு எதுவும் புரிந்திருக்காது. போலீஸ் படையின் சார்பில் அந்த இரண்டு அதிகாரிகளும் நடந்து கொண்டுள்ள விதம் வெட்கக் கேடானது.
கினிகிட்: முதியவர்களை முட்டாளாக்க முடியவில்லை. அதனால் போலீசார் இப்போது பிள்ளைகளை முட்டாளாக்க முயலுகின்றனர். காரணம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தங்கள் காப்பாளர் பதவியில் இருப்பர் என அவர்கள் நம்புகின்றனர்.
கவலைப்பட வேண்டாம். அவர்கள் அதனை தொடர விட்டு விடுவோம். சில மாதங்களுக்கு ஒழுங்காக நடந்து கொள்வதைப் பற்றி அவர்கள் கற்றுக் கொள்வர்.
உண்மை: இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில் உண்மைகளை மறைக்க முடியாது என்பதை அவர்கள் உனர வேண்டும். ஊடகங்களைக் கட்டுப்படுத்தி தங்களுக்கு தோதாக ‘செய்திகளை’ வெளியிடுகின்றவர்களுக்கு இப்போது தகவல் தொழில்நுட்பம் பயங்கரக் கனவாக மாறி விட்டது.
அவர்கள் விருப்பம் போல் செய்யட்டும். அவர்கள் நீண்ட காலத்துக்கு உண்மையை மறைக்க முடியாது.
கீ துவான் சாய்: அது உண்மை என்றால் போலீசாரே தீயவர்கள். அது வெறுக்கத்தக்கது. கலவரத்தைத் தடுப்பதே அவர்கள் வேலை. அதனைத் தூண்டி விடுவது அல்ல.