பினாங்கு பிஎன் -னிடம் நிழல் அமைச்சரவையோ மாநில ஆட்சி மன்றமோ கிடையாது என அதன் தலைவர் தெங் சாங் இயாவ் கூறியுள்ளார்.
புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்கு விருப்பம் கொண்டுள்ள பக்காத்தானிடம் நிழல் அமைச்சரவை கூட இல்லாதது பற்றி குறை கூறப்பட்டுள்ளது தொடர்பில் அவர் கருத்துரைத்தார்.
என்றாலும் பல்வேறு மாநில அரசாங்கத் துறைகளைக் கண்காணிக்க மாநில பிஎன் குழு ஒன்றை அமைத்துள்ளதாக அவர் சொன்னார்.
2008ம் ஆண்டு பினாங்கை பிஎன் இழந்தது முதல் அந்தக் குழு இயங்குவதாக அவர் தெரிவித்தார்.
அந்தப் பணிகளை தேர்ந்தெடுக்கப்பட்ட 11 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தப் பணியைச் செய்து வந்தனர். ஆனால் 2009ம் ஆண்டு மாநில பிஎன் பல்வேறு துறைகளைக் கண்காணிக்க 40 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 13 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒருங்கிணைப்பாளர்களை நியமித்தது.
அந்தத் துறைகளுக்கு பொறுப்பேற்றுள்ளவர்களுடைய அடைவு நிலையைக் கண்காணிப்பதும் பிஎன் உறுப்பினர்கள் வழியாக சட்டமன்றத்தில் விஷயங்களை எழுப்புவதுமே குழுவின் வேலை என்றும் தெங் சொன்னார்.
“அது நிழல் அமைச்சரவை அல்லது ஆட்சி மன்றம் என்ற எண்ணமே எங்களுக்கு எழுந்தது இல்லை. அது சிந்தனைக் களஞ்சியம் அல்லது மாநில அரசாங்கத் துறைகளைக் கண்காணிக்கும் அமைப்பாகும்.
‘இப்போது ஒருங்கிணைப்பாளர்கள் இருப்பதால் சில மாற்றங்கள் செய்யப்படும்,” என அவர் நிருபர்களிடம் கூறினார்.