கணக்கறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்

தலைமைக் கணக்காய்வாளரின் 2011ஆம் ஆண்டுக் கணக்கறிக்கை, இரண்டு வார தாமதத்துக்குப் பின்னர் இன்று காலை பின்னேரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று இதனைத் தெரிவிக்கிறது.

தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை பட்ஜெட்டுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்படுவதுதான் வழக்கம். ஆனால், இரண்டாமாண்டாக அது பட்ஜெட்டுக்குபின் வெளியிடப்படுகிறது.

தாமதத்தைத் தற்காத்துப் பேசிய பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ்,  பட்ஜெட் விவாதத்திலிருந்து கவனம் திரும்பிவிடக்கூடாது என்பதற்காக அவ்வாறு செய்யப்படுவதாகக் கூறினார்.

ஆனால், மாற்றரசுக் கட்சி, “விரும்பத்தகாத விவகாரங்கள்” வெளிப்படுத்தப்படுவதைத் தாமதப்படுத்தவே அவ்வாறு செய்யப்படுவதாகக் குறைகூறியுள்ளது.

TAGS: