வீடமைப்புக்காக வாங்கப்பட்ட நிலம் குறைந்த வாடகைக்கு விடப்பட்டது ஏன்?

1982-இல், கப்பாளா பத்தாஸில் அரச மலேசிய ஆகாயப்படைப் பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்காக வாங்கப்பட்ட நிலத்தில் திட்டப்படி  ஏன் வீடுகள் கட்டப்படவில்லை என்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வினவியுள்ளார்.

மாறாக, அந்த 330-ஏக்கர் நிலம் மாதம் ரிம7,000-க்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

முந்திய பின் மாநில அரசு ரிம5,148,000-க்கு அந்நிலத்தை வாங்கியது.

அதனை இவ்வளவு குறைந்த வாடகைக்கு விடுவது ஆகாயப்படைக்கு எந்த வலையில் ஆதாயகரமாக உள்ளது என்பதை விளக்குமாறு லிம் (படத்தில் வலப்புறம் இருப்பவர்) தற்காப்பு அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி(படத்தில் இடம் இருப்பவர்) யைக் கேட்டுக்கொண்டார்

“இவ்வளவு குறைந்த வாடகைக்கு விடும் அளவுக்கு அந்த நிறுவனத்திடம் என்ன சிறப்பு இருக்கிறது? இதனால் மக்களுக்கு நன்மை உண்டா?”.

அங்கு ஆகாயப்படைப் பணியாளர்களுக்கு வீடுகள் கட்டித்தருவதன்வழி ஹாஹிட், ஆகாயப்படையினதும்  நாட்டினதும் மக்களினதும் நலன்களைப் “பாதுகாக்க வேண்டும்”,என்று லிம் வலியுறுத்தினார்.