‘மசீச இஸ்லாத்தைத் தாக்கும் போது அம்னோ மௌனம் காக்கிறது’

‘மே 13 கதைகள் வேலை செய்யவில்லை என்பது நமக்குத் தெரியும். அதனால் குறிப்பிட்ட சில இனங்களை அச்சுறுத்துவதற்கு அவர்கள் இப்போது சமய விவகாரங்களைப் பயன்படுத்துகின்றனர்’

இஸ்லாத்தை தற்காத்த டிஏபி-யை நிக் அஜிஸ் பாராட்டுகிறார்

வீரா: நான் வாசித்த வரையில் ராசா எம்பி அந்தோனி லோக், பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக்மாட்-டைத் தற்காத்துள்ளார். அவர் இஸ்லாத்தைத் தற்காக்கவில்லை. ஏனெனில் அது அவருக்கு அவசியமில்லை.

அம்னோவில் இருப்பவர்கள் உட்பட முஸ்லிம்கள் தங்கள் சமயத்தைத் தற்காக்க வேண்டும். மசீச இஸ்லாத்தை தாக்கிப் பேசிய போது அம்னோ அமைதியாக இருந்தது.

அடையாளம் இல்லாதவன்_3e86: மக்களை அச்சுறுத்தி தங்களை ஆதரிக்குமாறு செய்வதற்கு பிஎன் -னும் அதன்உறுப்புக் கட்சிகளும் முயன்று வருகின்றன. அவற்றின் மே 13 கதைகள் வேலை செய்யவில்லை என்பது நமக்கு நன்கு தெரியும்.

அதனால் குறிப்பிட்ட சில இனங்களை அச்சுறுத்துவதற்கு அவர்கள் இப்போது சமய விவகாரங்களைப் பயன்படுத்துகின்றனர். பிஎன் சிந்தனைகள் வறண்டு விட்டன. மக்களைக் கவருவதற்கான வழிகள் இப்போது அதனிடம் குறைவாக உள்ளன.

டாக்: இனவாதப் பிரிவினை சம்பந்தப்பட்ட வரையில் மலேசியா மே 13-லிருந்து வெகு தொலைவு வந்து விட்டது. இப்போது லோக், தோக் குருவை ஆதரிப்பதை நாம் காண்கிறோம்.

முன்னாள் மலாக்கா முதலமைச்சர் ரஹிம் தம்பி சிக்-கால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட இளம் வயது சிறுமிக்காக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் போராடியதை நாம் மறக்கக் கூடாது.

20121221பேரிடர்: முஸ்லிம்களுடைய தார்மீகப் பண்புகள் மிகவும் மோசமான அளவுக்கு தாழ்ந்து போயுள்ளதாக தோக் குரு ஏன் எண்ணுகிறார் என்பது இப்போது எனக்குப் புரிகிறது.

நிர்வாணமாக உள்ள பழங்குடி மக்களைக் கண்டால் முஸ்லிம்கள் பாலியல் வல்லுறவில் இறங்குவர் என தோக் குரு நம்புகிறார். முஸ்லிம்களுடைய போக்கு அப்படியானது என தோக் குரு எண்ணினால் முஸ்லிம்களுக்கு விரிவான தார்மீகக் கல்வி அவசியமாகும்.

சிப்முங்: தோக் குரு நான் உங்களை மிகவும் உயர்வாக மதிக்கிரேன். நான் முஸ்லிமாக இல்லா விட்டாலும்  மற்ற மலாய்க்காரர்கள் ( அம்னோ மலாய்க்காரர்கள்) பின்பற்ற வேண்டிய உண்மையான மனிதர் என நான் சொல்வேன்.

உங்கள் அடக்கமும் சாந்தமான போக்கும் உங்கள் மனசு பெரியது என்பதைக் காட்டுகின்றது. உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் இறைவன் தொடர்ந்து ஆசீர்வதிக்கட்டும்.

ஹீரோ325: பாஸ் கட்சியை ஆதரிப்பதின் மூலம் முஸ்லிம் அல்லாதவர்கள் உலாமாக்களுடைய வலிமையைப் பெருக்கியுள்ளனர். அதனால் யாரும் தொட முடியாத அளவுக்கு அவர்கள் வலிமை பெற்றுள்ளனர்.

அதிகாரங்கள் குவிந்துள்ளதாகவும் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் முஸ்லிம் அல்லாதவர்கள் நிறையப் புகார் செய்கின்றனர். ஆனால் அவர்கள் உலாமாக்களை ஏற்றுக் கொள்வதாகத் தோன்றுகிறது.

வெகு விரைவில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசமைப்புப் பாதுகாப்பு பறிபோகும். உலாமாக்களின் அதிகார அத்துமீறல்களுக்கு அவர்கள் உட்படுவர்.

அல்பா: மசீச தலைவர்களுக்கு தங்களது சொந்த சமயங்களைப் பற்றிக் கூட எதுவும் தெரியாது. சூதாடுவதை, மதுபானம் அருந்துவதை தவிர்க்குமாறு பௌத்த சமயம் தன்னைப் பின்பற்றுகின்றவர்களுக்குச் சொல்கிறது.

ஆனால் மசீச தலைவர்கள் அவற்றை ஆதரிக்கக் கடுமையாகப் போராடுவதாகத் தெரிகிறது.

ஜெரோனிமோ: தோக் குரு நிக் அஜிஸைப் போன்ற பெரிய மனதைக் கொண்ட சமய அரசியல் ஆன்மாவை பார்க்கும் போது நான் மிகவும் சிறிய மனிதனாகி  விட்டதாக உணருகிறேன்,” என அந்தோனி லோக் கூறியுள்ளார்.

ஆம். அந்தோனி நீங்கள் சொல்வது சரி தான். கவலைப்பட வேண்டாம். 13வது பொதுத் தேர்தலில் நாங்கள் தோக் குருவுக்கு ஆதரவு அளிப்போம்.

அடையாளம் இல்லாதவன் #18452573: நிக் அஜிஸும் அந்தோனி லோக்-கும் தங்கள் பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளனர். என்னைப் பொறுத்த வரையில் நிக் அஜிஸ் சொல்வது சரியல்ல. பாலியல் வல்லுறவு ஏன் நிகழ்கிறது என்பதற்கு அவர் சமய அடிப்படையில் விளக்கமளித்துள்ளார். அதனை அவர் பாலியல் வல்லுறவுக்கு ஊக்கமூட்டுவதாக கருதக் கூடாது.

பாலியல் வல்லுறவு சம்பவங்கள் ஏன் நிகழ்கின்றன என்பது மீதான சமயச் சிந்தனைக்கும் உண்மை நிலைக்கும் இடையில் உள்ள வேறுபாடு அது தான்.

10க்கும் மேற்பட்ட அம்னோ பிஎன் -காரர்களை நிறுத்தி வைத்தாலும் அவர்களைக் காட்டிலும் நிக் அஜிஸ் சிறந்த முஸ்லிம் ஆவார். அவருடைய உண்மையான போக்கு, நேர்மை, கௌரவம் ஆகியவையே அதற்குக் காரணம்.

நம்மைப் பிளவுபடுத்தி அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் மசீச-வும் அம்னோ ஈடுபட்டுள்ளதை மலாய்க்காரர் அல்லாதவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

TAGS: