அல்டான்துன்யா ஷரீபு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள் இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மீதான மேல்முறையீட்டு விசாரணை அரசுதரப்பும் எதிர்தரப்பும் கேட்டுக் கொண்டதால் தள்ளிப்போடப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
2006 அக்டோபர் 19-இல், மங்கோலியப் பெண்ணான அல்டான்துன்யாவை ஷா ஆலாம் காட்டுப் பகுதியில் கொலை செய்தவர்கள் தலைமை இன்ஸ்பெக்டர் அசிலா ஹத்ரியும் கார்ப்பரல் சிருல் அஸ்ஹார் உமரும்தான் என்று ஷா ஆலம் உயர் நீதிமன்றம் 2009, ஏப்ரல் 9-இல் தீர்ப்பளித்தது.
அத்தீர்ப்பை எதிர்த்து செய்துகொள்ளப்பட்ட மேல்முறையீடு மீதான விசாரணை கடந்த புதன், வியாழக்கிழமைகளில் நடத்தப்பட நாள் குறிக்கப்பட்டிருந்தது. பிறகு தள்ளிவைக்கப்பட்டது.
அது தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கி கூட்டரசு நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் வெளியிட்ட இரண்டு-பாரா கொண்ட அறிக்கையொன்று அரசுதரப்பும் எதிர்தரப்பும் விசாரணையைத் தள்ளிவைக்கக் கேட்டுக்கொண்டு அக்டோபர் 19இல்- என்ன நகைமுரண், அது அல்டான்துயா இறந்த ஆறாம் ஆண்டு நினைவு நாள்- கடிதம் எழுதி இருந்ததாகக் குறிப்பிட்டது.
“முறையீடு தொடர்பில் சிக்கலான விவகாரங்கள் பலவற்றை ஆராய கால அவகாசம் தேவை என அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.
“இப்போது டிசம்பர் 14-இல் அவ்வழக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அன்று விசாரணைக்கான நாள் முடிவு செய்யப்படும்”, என்றது கூறியது.