அமைச்சர் லியாவ்: கோழிகள் மீதான ஆய்வுக் கூட அறிக்கை இன்னும் வெளியாகவில்லை

குறிப்பிட்ட ஒரு நிறுவனம் விற்பனைக்கு அனுப்பும் கோழிகளில்  chloramphenicol எனப்படும் நோய்த் தடுப்பு பொருள்   (antibiotic)  கலந்துள்ளதாக கூறப்படுவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக் கூடச் சோதனை அறிக்கைக்காக சுகாதார அமைச்சு இன்னும்  காத்திருக்கிறது. இவ்வாறு  அதன் அமைச்சர் லியாவ் தியோங் லாய் கூறியிருக்கிறார்.

அந்த chloramphenicol  உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. அடுத்த கட்ட நடவடிக்கையை முடிவு செய்யும் முன்னர் ஆய்வுக் கூட சோதனை முடிவுகளுக்காக  அமைச்சு காத்திருக்கும் என்றும் அவர் சொன்னார்.

சோதனைகள் மூலம்  chloramphenicol இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பொருள் இறக்குமதி  செய்யப்படுவதற்கு சரவாக் தடை விதித்துள்ளது குறித்துக் கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது லியாவ் அவ்வாறு பதில் அளித்தார்.

பாக்டிரியா சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்துவதற்கு  நோய்த் தடுப்பு பொருள்   (antibiotic) பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் அதனால் வாந்தி, வயிற்றுப் போக்கு, தலைவலி போன்ற பக்க விளைவுகள் ஏற்படக் கூடிய சாத்தியம் உண்டு.

-பெர்னாமா