மலேசிய இந்தியர்களுடைய நிலை பற்றி ஒர் எம்பி துணை அமைச்சருடன் சர்ச்சை

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியர்களுடைய நிலையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் தவறி விட்டதாகக் கூறி மலேசிய இந்திய எம்பி ஒருவர் மக்களவையில் பிஎன் துணை அமைச்சர் ஓருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

“இந்தியர்கள் ஒரங்கட்டப்பட்டுள்ளனர். அவர்கள் மூன்றாம் தரக் குடி மக்களாகியுள்ளனர்,” என ஈப்போ பாராட் எம்பி எம் குலசேகரன் இன்று கேள்வி நேரத்தின் போது கூறினார்.

அந்த வகையில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது, இந்த நாட்டில் இந்தியர்களில் 70 விழுக்காட்டினர் மாதம் ஒன்றுக்கு 700 ரிங்கிட்டுக்கும் குறைவான வருமானத்தைப் பெறுவதிலிருந்தும் அந்த சிறுபான்மை சமூகத்தை பல சமூக நோய்கள் பீடித்திருப்பதிலிருந்தும் அது தெளிவாகத் தெரிகிறது என்றார் அவர்.

இந்தியர்களிடையே அதிக எண்ணிக்கையிலான குண்டர்களும் அதிக எண்ணிக்கையிலான வேலை இல்லாதவர்களும் அதிக எண்ணிக்கையில் மதுபானப் பித்தர்களும் அதிக எண்ணிக்கையில் தனித்து வாழும் தாய்மார்களும் இருக்கின்றனர்,” என குலசேகரன் மேலும் தெரிவித்தார்.

 

TAGS: