இஸ்லாத்துக்கு அரசியல் சாயம் பூசுவது யார் ? பாஸ் அல்ல

‘நான் அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டேன். நுருல் இஸ்ஸா அதனைச் செய்யவில்லை. அமைச்சர்கள் உண்மையைப் பேச வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவறாக வழி நடத்தக் கூடாது’

இஸ்லாத்தைக் களங்கப்படுத்துவதாக நுருல் மீது குற்றம் சாட்டப்படலாம்

ஜியூடைஸ்: பிரதமர் துறை துணை அமைச்சர் மாஷித்தா இப்ராஹிம் அவர்களே, மற்றவர்கள் இஸ்லாத்தின்  மீது எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு உங்களைப் போன்றவர்களே காரணம்.

கட்டாயம் கூடாது எனச் சொல்வதற்கும் இஸ்லாத்தை விட்டு வெளியேறுமாறு முஸ்லிம்களுக்கு ஊக்கமூட்டுவதும் வெவ்வேறு விஷயங்களாகும். ஒரு சமயத்தில் சேருவதா அல்லது ஒரு சமயத்திலிருந்து விலகுவதா என்பதை ஒவ்வொரு நபரும் முடிவு செய்ய இயலும். அதனை செய்வதற்கான உரிமை மனித உரிமை ஆகும்.

சமயத்தின் மீது நம்பிக்கை இல்லாத ஒருவரை முஸ்லிமாக தொடர்ந்து இருக்குமாறு நீங்கள் அவரைக் கட்டாயப்படுத்துவது இஸ்லாத்தைக் களங்கப்படுத்துவது இல்லையா ? ஒரு நபரைஇல்லையா ?

லெம்பா பந்தாய் எம்பி இஸ்லாத்தையோ அல்லது வேறு எந்த சமயத்தையோ அவமதிக்கவில்லை. ஒரு  சமயத்தை பின்பற்றுகின்றவராக இருக்குமாறு யாரையும் கட்டுப்படுத்தக் கூடாது என்று தான் அவர் சொன்னார். அது எப்படித் தவறாகும் ?

கிஸ்டி: மலாய்க்காரர் ஒருவர் முஸ்லிமாக மனிதன் உருவாக்கிய சட்டம் காரணமாக கருதப்படுகின்றார். உண்மையில் முஸ்லிம்களாகப் பிறந்த பலர் ( மலாய்க்காரர்  அல்லது மற்றவர்கள் ) சமய நம்பிக்கயற்றவர்களாக இருக்கின்றனர். சமயத்தைப் பின்பற்றுவதே இல்லை.

அல்லாஹ் -வின் பார்வையில் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்ததால் ஒருவரை முஸ்லிமாக்கி விட வேண்டிய அவசியமில்லை. அல்லாஹ் -விடம் தம்மை ஒப்படைத்து அல்லாஹ்-வும் அவரது தூதரான முகமட்டும்  போதித்த வழிகளில் வாழ்கின்றவர்களே முஸ்லிம்கள் ஆவர்.

அர்தோங் பினாங்: சமயம் மீது அறிவாற்றல் அடிப்படையிலான கருத்துப் பரிமாற்றத்தை அதிகாரத்தில் உள்ளவர்கள் இப்படித் திரித்து அரசியல் ஆதாயம் தேட முயலுவது மிகவும் வருத்தத்தைத் தருகின்றது.

மலேசிய இனம்: மாஷித்தா அவர்களே, இஸ்லாத்தை விட்டு வெளியேறுமாறு நுருல் இஸ்ஸா எப்போது முஸ்லிம்களுக்கு ஊக்கமூட்டினார் ? நீங்கள் பொய் சொன்னால் நீங்கள் குற்றம் சாட்டும் நபரைக் காட்டிலும் பெரிய பாவத்தைச் செய்கின்றீர்கள்.

கேஜே ஜான்: நான் அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டேன். நுருல் இஸ்ஸா அதனைச் செய்யவில்லை. அமைச்சர்கள் உண்மையைப் பேச வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவறாக வழி நடத்தக் கூடாது?

அடையாளம் இல்லாதவன்_3f15: இந்தோனிசியாவில் சமயச் சுதந்திரம் உள்ளது. ஆனால் அங்கு மக்கள் பெரும் எண்ணிக்கையில் இஸ்லாத்தை விட்டு வெளியேறவில்லை. அவர்கள் தங்கள் சமய நம்பிக்கையில் வலுவாக இருக்கின்றனர். உண்மையில் சுதந்திரம் என்பது மருட்டலா ?

அமைதிப் பணியாளன்: மலேசிய அரசியலில் என்ன நடக்கிறது ? நாடாளுமன்றத்தில் முதிர்ச்சி அடையாத சிறுவர்கள் அமர்ந்துள்ளனரா ? நுருல் இஸ்ஸா தமது கருத்தைத் தெரிவித்துள்ளார். அது மதிக்கப்பட வேண்டும்.

அந்த விஷயத்தை விவேகமாக விவாதிக்க முடியாத முட்டாள்களே பிஎன் -னில் இருப்பது நமக்கு வருத்தமளிக்கிறது. அதை விட எவ்வளவோ பெரிய விஷயங்கள் நாட்டை அழுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஆளும் கட்சி இன உணர்வுகளைத் தூண்டி விடுவதிலேயே மும்முரமாக இருக்கிறது.

புதிய மலேசியா: பிஎன் -னும் உத்துசான் மலேசியாவும் திரிக்கும் கதைகளை எந்த ஒரு உண்மையான முஸ்லிமும் நம்ப மாட்டார். நமக்காக பிஎன் -னும் உத்துசானும் எடுக்கும் முடிவுகள் மீதும் அவை கொடுக்கும் விளக்கங்கள் மீது நாங்கள் வெறுப்படைந்து விட்டோம்.

வாதங்கள் வேண்டாம். வீடியோ ஒளிப்பதிவு இருந்தால் அதனை இணையத்தில் சேருங்கள். மக்கள் அதனைப் பார்த்து முடிவு செய்யட்டும்.

விக்டர் ஜான்: அம்னோ அல்லது பிஎன் மற்றும் அவற்றின் சேவகர்கள் நடத்தும் ஏமாற்று வேலைகளும் கதைகளைத் திரிப்பதும் பக்காத்தான் ராக்யாட்டுக்கும் நுருல் இஸ்ஸாவுக்குமான ஆதரவு பெருகுவதற்கே வழி வகுக்கும்.

பிடிஎன்: இந்தப் போலேலாந்தில் மட்டுமே அரசியல் காரணத்திற்காக இன்னொரு முஸ்லிமை அழிப்பதற்கு ஒர் அரசியல் கருவியாக  இஸ்லாம் பயன்படுத்தப்பட முடியும் உண்மையில் மலேசியாவில் இஸ்லாத்துக்குக் கடும் மிரட்டல் ஏற்பட்டுள்ளது.