AES சம்மன் பெற்றோருக்கு உதவ பாஸ் முகப்புச்சேவை

தானியக்க அமலாக்கமுறை(ஏஇஎஸ்) யின்கீழ் சம்மன்கள் பெற்றோருக்கு உதவ பாஸ், கோலாலும்பூர் ஜாலான் ராஜா லாவுட்டில் அதன் தலைமையகத்தில் ஒரு முகப்புச் சேவையைத் தொடங்க விருக்கிறது. நவம்பர் 21-இலிருந்து அது செயல்படும்.

சம்மன் பெற்றோர் அவற்றை அங்கு கொண்டுவரலாம் என்று பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார் கூறினார். அது நண்பகல் 12-இலிருந்து பிற்பகல் மணி 2வரை திறந்திருக்கும்.

ஏஇஎஸ் சம்மன் பெற்றோர் அதற்கான அபராதத்தைக் கட்ட வேண்டாம் என்றும் அவ்விவகாரத்தை நீதிமன்றம் கொண்டு செல்லலாம் என்றும் மாபுஸ் கூறினார்.அவர்களுக்கு பாஸ் இலவச சட்ட உதவி வ்ழங்கும்..

“ஆனால், நீதிமன்றம் அபராதம் கட்ட உத்தரவிட்டால் கட்டித்தான் ஆக வேண்டும்”, என்றாரவர்.

கெடாவில் உள்ளவர்கள் பத்து செம்பிலானில் உள்ள கெடா பாஸ் தலைமையகத்துக்குச் செல்லலாம்.

 

 

TAGS: