வலைப்பதிவுகள்: முஸ்லிம்கள் சமயத்தை விட்டு வெளியேறலாம் என பாக் லா சொன்னார்

இஸ்லாத்தை விட்டு வெளியேற விரும்புகின்றவர்கள் அவ்வாறு செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி சொன்னதாக கூறும் செய்தி நறுக்குகள் இப்போது பல பக்காத்தான் ஆதரவு வலைப்பதிவுகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

அந்தக் கட்டுரையை 2007ம் ஆண்டு ஜுலை மாதம் 10ம் தேதி சானல் நியூஸ் ஏசியா வெளியிட்டது. அது இவ்வாறு சொல்கிறது: “செய்தித் தலைப்புக்களாக ஆதிக்கம் செலுத்துகின்ற சமயத் தகராறுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து வினவப்பட்ட போது முஸ்லிம்கள் சமயத்தை விட்டு விலகலாம் என்றும்  ஆனால் அவர்கள் முதலில் அந்த விஷயத்தை மாநில சமய அதிகாரிகளிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் (அப்துல்லா) விளக்கினார்.”

“திரு அப்துல்லா கூறுகிறார்: இது செய்ய முடியாத ஏதோ ஒரு விஷயமல்ல. அது ஏற்கனவே நிகழ்ந்துள்ளது. ஏதாவது ஒரு காரணத்துக்காக சமயத்தை விட்டு வெளியேற முடிவு செய்தவர்கள், முஸ்லிம்களாக இனிமேலும் இருக்க விரும்பாதவர்கள், நீங்கள் என்ன செய்ய முடியும் ? அவர்கள் சமயத்தை விட்டு விலக விரும்பினால் நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள் ?”

“அவர்களுக்கு சமய அதிகாரிகள் வழி காட்டுதலை வழங்குவதோடு அவர்கள் இஸ்லாத்தைக் கைவிடும் நோக்கத்திற்கான பின்னணியையும் கண்டு பிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.”

பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் சமய நம்பிக்கையற்ற நிலைக்கு ஊக்கமூட்டுவதாகக் கூறிக் கொண்டு அவரை பிஎன் அரசியல்வாதிகள் கடுமையாக ஊடகங்களில் விமர்சனம் செய்து வரும் வேளையில் அந்தக் கட்டுரை மீண்டும் பக்காத்தான் ஆதரவு வலைப்பதிவுகளில் வெளியிடப்பட்டுள்ளது.

பிஎன் அரசியல்வாதிகள் இரட்டை வேடம் போடுவதாகவும் அந்த வலைப்பதிவுகள் குற்றம் சாட்டின.

“பாக் லா-வின் ( அப்துல்லாவின் சுருக்கமான பெயர்) நடவடிக்கைகள் சமய நம்பிக்கையற்ற நிலைகளுக்கு நுருல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்ட போது அம்னோ கூலிகள் கூறிக் கொண்டது போல முஸ்லிம்கள் சமய நம்பிக்கையற்ற நிலைக்கு மாறுவதற்கு ஊக்கமூட்டவில்லையா ?”

“பாக் லா அறிக்கைகள் எந்த ஒரு அம்னோ/பிஎன் கட்டுப்பாட்டில் உள்ள பத்திரிக்கைகளில் வெளிவரவில்லை. மாறாக சில அந்நிய அச்சு ஊடகங்களிலும் இணைய ஊடகங்களிலும் மட்டுமே வெளியாகின..”

“அம்னோவே அதனை சொன்ன போது அது இஸ்லாத்துக்கு பாதகமானது இல்லையா ?” என பக்காத்தான் ராக்யாட் ஆதரவு Anak Sungai Derhaka வலைப்பதிவு வினவியது. அது நேற்று அந்த செய்தி நறுக்குகளை வெளியிட்டது.

மலாய்க்காரர்களுக்கு சமயச் சுதந்திரம் உண்டா என நுருலிடம் நவம்பர் 3ம் தேதி கருத்தரங்கு ஒன்றில் வினவப்பட்ட பின்னர் அந்தச் சர்ச்சை மூண்டது.

அதற்கு பதில் அளித்த நுருல்,” நான் நிச்சயமாக நடப்பு எண்ணங்களுக்கு இணங்க,” என்றார்.

அவரது அறிக்கை சமய நம்பிக்கையற்ற நிலைக்கு ஊக்கமூட்டுவதாக கூறப்பட்ட போது,” சமய நம்பிக்கையற்ற நிலையை நான் ஏற்றுக் கொள்வதும் இல்லை, சமய நம்பிக்கையற்ற நிலைக்கு ஊக்கமூட்டுவதும் இல்லை,” என்றார் நுருல்.

“குடி மகன் ஒருவர் கூட்டரசு அரசமைப்புக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதைப் போல இஸ்லாத்தைத் தழுவிய பின்னர் ஒரு முஸ்லிம் ஷாரியாவுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற பொதுவான நிலையில் தாம் உறுதியாக இருக்கிறேன்.”