உங்கள் கருத்து: மகாதீருடைய ‘நியாயம்’ பூமி தகுதிக்கும் அமலாக்கப்பட வேண்டும்

‘ஹுடுட் சட்டத்தை நியாயமாக அமலாக்குவது பற்றிப் பேசுவதற்கு முன்னர் சட்டத்தின் கீழ் சமமான குடியுரிமை, சமமான வாய்ப்புக்கள், சமமான சலுகைகள் ஆகியவற்றைக் கொடுப்பது பற்றிப் பேசலாமே ?

மகாதீர்: பாஸ் ‘அனைவருக்கும் ஹுடுட் சட்டத்தை அமலாக்க வேண்டும்’

பல இனம்: துருக்கியைப் போன்று மலேசியாவை மிதவாதத்திற்கும் நவீன மயத்துக்கும் கொண்டு செல்வதற்கு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்குக் நிறைய வாய்ப்பு இருந்தது. ஆனால் இன்று நாடு எதிர்நோக்கும் பல அவலங்களுக்கு அவர் காரணமாக இருந்து விட்டார்.

அவர் நியாயத்தைப் பற்றிப் பேசினார். நியாயத்தைப் பற்றிப் பேசுவதற்கு அருகதையற்றவர்கள் என யாராவது இருந்தால் அது மகாதீராகத் தான் இருக்க வேண்டும். மிகவும் நேர்மையற்ற முறையில் அவர் நடந்து கொண்டார்.

ஊழல் அவரது காலத்தில் டெண்டர் வழங்கப்படுவதில் நேர்மை இல்லாததால் ஊழல் மோசமடைந்தது. எல்லாம் சேவகர்களுக்கே கொடுக்கப்பட்டது.

மலேசியர்களை பூமிபுத்ராக்கள், பூமிபுத்ரா அல்லாதவர் என அவர் நியாயமற்ற முறையில் பிரித்தார். சேவகர்கள்- சேவகர்கள் அல்லாதார் எனப் பிரித்தார். அவர் எப்படி பாஸ் நியாயமற்ற முறையில் நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டமுடியும் ?.

உங்கள் அடிச்சுவட்டில்: மகாதீர் அவர்களே இந்தப் பூமியில் நீங்கள் தான் மிகவும் கெட்டிக்காரர் என எண்ண வேண்டாம்.  நான் முஸ்லிம் அல்ல. ஆனால் திருக்குர் ஆனில் கூறப்பட்டுள்ள ‘நியாயத்தை’ நானும் விளக்க முடியும்.

இறைவன் நியாயத்தின் படி ஹுடுட் அனைவருக்கும் சமமாக அமலாக்கப்பட வேண்டும் என நீங்கள் சொல்கின்றீர்கள். ஆனால் நான் சொல்கிறேன்: “தமது சிந்தனைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு ஹுடுட்-டை அமலாக்கக் கூடாது என இறைவன் நியாயத்துடனும் கருணை உள்ளத்துடனும் தேர்வு செய்துள்ளதாக நான் கருதுகிறேன்”

இஸ்லாத்தில் வற்புறுத்தல் அல்லது கட்டாயம் ஏதும் கூடாது என்பதும் இறைவனுடய பெருந்தன்மையாகும்.

தயவு செய்து நீங்கள் கடவுள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த நாட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கு நீங்கள் தான் இறுதித் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதில்லை.

அடையாளம் இல்லாதவன் #94851632: ஆம், மகாதீர் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். கைகளை துண்டிப்பது அம்னோ தலைவர்களுக்கு மட்டும் இருக்கக் கூடாது. அதில் மசீச-விலும் மஇகா-விலும் உள்ள  உங்களுடைய கைப்பாவைகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

ஹுடுட் குறித்து மக்கள் அச்சப்படவில்லை. காரணம் மக்களிடமிருந்து திருடியது நீங்கள். உண்மையில் அவர்கள் தான் ஹுடுட் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டும்.

இம்ரான்: அந்த கிழவர் ‘நியாயம்’ பற்றிப் பேசுகிறார். பிஎன் மலாய்க்காரர்களையும் பிஎன் அல்லாதமலாய்க்காரர்களையும் சமமாக நடத்துவது பற்றிப் பேசலாமா ?

பாஸ் முஸ்லிம் அல்லாதாருக்கு ஹுடுட் சட்டத்தை அமலாக்க விரும்பி அதே நேரத்தில் மலாய்க்காரர்களையும் மலாய்க்காரர் அல்லாதரையும் சமமாக நடத்தினால் மலாய்க்காரர் அல்லாதாராகிய நாங்கள் அதனை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வோம்.

என் எக்ஸ்: அந்த ஊழல் மலிந்த தீய மனிதருக்கு சமயத்தைப் பற்றிப் பேசுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது ? அவர் தமது சமயத்தையே கேலிக் கூத்தாக்குகிறார்.

ஸ்விபெண்டர்: நியாயத்தை பற்றி பேசுகின்றீர்களா ? ஹுடுட் சட்டத்தை நியாயமாக அமலாக்குவது பற்றிப் பேசுவதற்கு முன்னர் சட்டத்தின் கீழ் சமமான குடியுரிமை, சமமான வாய்ப்புக்கள், சமமான சலுகைகள் ஆகியவற்றைக் கொடுப்பது பற்றிப் பேசலாமே ?

நியாயத்துடன் நடந்து கொள்வதற்கு முதல் படி இன அடிப்படையிலான கொள்கைகளைக் கைவிட்டு தேவை அடிப்படையிலான கொள்கைகளை அமலாக்குவதாகும்.

பாவி: அவர் மீண்டும் வாயைத் திறந்து விட்டார். மகாதீர் அவர்களே நீங்கள் ஏபி அனுமதிகளை பல்வேறு இனங்களுக்கும் சமமாக வழங்கினீர்களா ?

அவற்றை நீங்கள் மலாய்க்காரர்களுக்கு இடையில் கூட நீங்கள் நியாயமாக பகிர்ந்தளிக்கவில்லை. உங்கள் சேவகர்களுக்கே அது கிடைத்தது. அதனால் இனங்களுக்கும் சமயங்களுக்கும் இடையில் சம நிலை நிலவுவது பற்றி எங்களுக்குப் போதிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

மலேசிய இனம்: ‘நமக்கு தெரிந்த அந்தப் பிசாசு’ ஹுடுட்டை நம்பவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை. அத்தகைய அறிக்கைகளை வெளியிட்டு பதில் கூறுமாறு பாஸ் கட்சியை தூண்டி விடுவதே அவரது நோக்கமாகும். அதன் வழி பாஸ் கட்சியிலிருந்து முஸ்லிம் அல்லாதார் விலகியிருப்பர் என அவர் நம்புகிறார்.

அவர் தந்திரக்காரர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது தீய நோக்கத்துக்கு செலுத்தப்படும் தந்திரமாகும்.