ஷாரிஸாட் மலாய்க்காரர்களிடம் சொல்கிறார் : ஒன்றுபடுங்கள் இல்லையேல் அரசியல் அதிகாரத்தை இழப்பீர்கள்

அம்னோ மகளிர் பிரிவு ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த அதன் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் இனவாத அட்டையைப் பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள மலாய்க்காரர்கள் ஒன்றுபடா விட்டால் அவர்கள் “தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகள்’ ஆகி விடுவர் என எச்சரித்துள்ளார்.

அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ எதிர்நோக்கும் சவால்களில் ஒன்று, ஆபத்தான நிலையில் உள்ள மலாய் அதிகாரத்தைப் பாதுகாக்க வேண்டிய தேவை என அவர் பேராளர்களிடம் கூறினார்(bagai telur di hujung tanduk).

“நமது சொந்த மண்ணில் நாம் அகதிகளாக மாறி விட விரும்பவில்லை என்றால் நாம் அதனை இப்போதே சமாளிக்க வேண்டும். மலாய் வாக்குகள் பிளவுபட்டுள்ளதால் மலாய்க்காரர்களுடைய அரசியல் அதிகாரம் மங்கியுள்ளது,” என்றார் அவர்.

“இப்போது பொருளாதார வலிமை மலாய்க்காரர் அல்லாதாரிடம் உள்ளது. நாம் அரசியல் அதிகாரத்தையும் இழக்க விரும்பிகின்றோமா ? அம்னோ பலவீனமாக இருந்தால் ஆபத்தை மற்ற அனைத்து வம்சாவளி மக்களும் உணருவர்.’

“மலாய்க்காரர்கள் ஒன்றுபட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் வலுவான முதுகெலும்பாக திகழ்ந்து நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை இருக்குமானால் கிடைக்கும் அரசியல் நிலைத்தன்மை மூலம் எல்லா இனங்களும் சமூகத்தில் எல்லா நிலைகளையும் சார்ந்த மக்களும் நன்மை அடைவார்கள்.”

TAGS: