கைரி: சர்ச்சிலைப் போல சண்டை போடுங்கள், ஒரு போதும் சரணடைய வேண்டாம்

அம்னோ இளைஞர் ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த அதன் தலைவர் கைரி ஜமாலுதின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்து இரண்டாவது உலகப் போரை மேற்கோள் காட்டி மிகவும் வீர ஆவேசமாகப் பேசினார்.

அடுத்த பொதுத் தேர்தலை அவர் இரண்டாவது உலகப் போரைப் போன்றது எனக் குறிப்பிட்ட அவர் பிஎன்-னை பிரிட்டனுடன் ஒப்பிட்ட அவர், பிரிட்டன் சண்டையிட்டது. அக்ஸிஸ் வல்லரசுகளை எதிர்த்தது- அதே போன்று பக்காத்தான் ராக்யாட்டை இப்போது பிஎன் எதிர்க்கிறது.

“இரண்டாம் உலகப் போர் மூண்ட பின்னர் அந்த அக்ஸிஸ் வல்லரசுகள் பிரிட்டிஷ் கடற்கரைக்கு மிக அணுக்கமாகச் சென்று விட்டன. அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் வின்சன் சர்ச்சில் தமது மக்களுடைய போராட்ட  உணர்வுகளைத் தட்டி எழுப்பினார்.”

“இரண்டு சாத்தியக் கூறுகள், இரண்டு வகையான எதிர்காலம், இருள்-வெளிச்சம் ஆகியவற்றுக்கு இடையில் கசப்பான நொடிகள். ஆனால் சர்ச்சில் சோர்வடையவில்லை, அச்சமடையவும் இல்லை.  கடல், ஆகாயம், கடற்கரைகளில், ஏன் சாலைகளிலும் கூட தமது  நாடு சண்டையிடும் என அவர் சூளுரைத்தார். பட்டினியால் வாடினாலும் அடிமையானாலும் தமது நாடு ஒரு போதும் சரணடையாது என்றார் அவர்.”

TAGS: