நஜிப்: அம்னோ கடந்த காலத்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்க முடியாது

அம்னோ கடந்த காலச் சாதனைகளை சொல்லிக் கொண்டிருப்பதற்கு அப்பாலும் செல்ல வேண்டும் என அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் எனக் கூறியிருக்கிறார்.

ஏனெனில் அத்தகையை செய்திகள் இளம் வாக்காளர்களிடம் எடுபடாமல் போகலாம் என அவர் சொன்னார்.

நஜிப் இன்று கோலாலம்பூரில் 66வது அம்னோ பொதுப் பேரவையைத் தொடக்கி வைத்துப் பேசினார்.

2008ம் ஆண்டுக்குப் பின்னர் பதிந்து கொண்டுள்ள 2.9 மில்லியன் புதிய வாக்காளர்களை அம்னோ இப்போது எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றார் அவர்.

அவர்களில் பெரும்பாலோர் நன்கு படித்த இளைஞர்கள் என்பதை நஜிப் சுட்டிக் காட்டினார்.

“அந்த எண்ணிக்கை மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். அது மொத்தமுள்ள 13.1 மில்லியன் மலேசிய வாக்காளர்களில் அது ஐந்தில் ஒரு பகுதியைக் குறிக்கிறது.”

“13வது பொதுத் தேர்தலில் ஐந்து வாக்காளர்களில் ஒருவர் புதிய வாக்காளர் அல்லது முதன் முறையாக வாக்களிப்பவர் என்பதே அதன் அர்த்தகும்.”

மொத்தம் 2,722 பேராளர்கள் அம்னோ பொதுப் பேரவையில் கலந்து கொண்டுள்ளனர்.

வாக்காளர் விகிதங்கள் மாறிக் கொண்டிருப்பதால் அம்னோவும் பிஎன் -னும் ‘கடந்த காலச் சாதனைகளில்’ மட்டும் திளைத்துக் கொண்டிருக்க முடியாது என நஜிப் தொடர்ந்து குறிப்பிட்டார்.

 

TAGS: